பெங்களூர் ஏற்கனவே தோட்ட நகரம் என்று பெயர் பெற்றது... அங்கு எவ்வளவுதான் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தாலும், வளர்ந்தாலும், அந்த குடியிருப்புகளுக்கு நிகராக பூங்காக்களையும் கொண்டாடுகிறார்கள். சிறிய பூங்காவாக இருந்தாலும் அதையும் அழகுற பராமரிக்கிறார்கள். சிறிய பூங்காவே அப்படி என்றால் பெரிய பூங்காவை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று கேள்விக்கு விடைதான் "லால்பாக்கில்' நடந்த மலர்க்கண்காட்சி
அங்குள்ள "கப்பன் பாக்',"லால் பாக்' என்ற இரண்டு பெரிய பூங்காக்களில் "லால்பாக்கில்' குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி மிகவும் பிரசித்தம். கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து மக்கள் வருவார்கள், காரணம் ஒவ்வொருமுறையும் ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்துவார்கள்
எதிர்பார்த்தது போலவே இந்த வருடம் பல லட்சம் பூக்களைக் கொண்டு உருவாக்கிய " புத்தகயா' பலரது கவனத்தை கவர்ந்தது. அதே போல பானையில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல மலர்களைக் கொண்டே மலரருவி உருவாக்கியிருந்தார்கள். இரண்டும் கொள்ளை அழகு.மக்கள் திருவிழா போல பார்த்து சென்றார்கள்.
உலகத்தில் இத்தனை விதமான மலர்களா என்று வியந்து பார்க்கும்படி, பல விதமான மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.