Pokkisham- Seran | கண் போன போக்கிலே...-எல்.முருகராஜ்| Dinamalar

கண் போன போக்கிலே...-எல்.முருகராஜ்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் பா.சேரன். தற்போது புதுபெருங்களத்தூரில் வசிக்கிறார். சிறுவயது முதலே ஒரு ஒவியனாக வரவேண்டும் என்பது இவரது ஆர்வம் ஆனால், அது வயிற்றுக்கு சோறு போடாது என்று குடும்பத்தார் சொல்லியதை அடுத்து கல்லூரியில் படித்து பட்டம் பெற்று இன்று ஒரு அதிகாரியாக இருக்கிறார்.

ஆனாலும் மனதிற்கு தீனி வேண்டுமே... நீ ஒரு கலைஞன் என்று மனது சொல்வதற்கு ஏற்ப ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்து நிறைய ஒவியம் வரைகிறார். இயற்கையாக கிடைக்கும் மரவேர்கள், மரத்துண்டுகளைக் கொண்டு மரச்சிற்பங்கள் செய்து வருகிறார். அதே நேரம் எப்போதாவது தனது மனதை பாதிக்கும் விஷயத்தை பார்த்தால் தன்னிடம் உள்ள சிறிய கேமிராவைக் கொண்டு படம் எடுக்கிறார்.


அப்படி அவர் எடுத்த படங்களில்தான் எவ்வளவு விஷயங்கள், படவிளக்கங்களே தேவைப்படாத அளவிற்கு பார்க்கும்போதே படங்கள் பேசுகின்றனதொப்பி விற்கும் பெண் தனது தலையை வெயில் கொடுமையில் இருந்து காத்துக்கொள்ள பழைய செய்தி பத்திரிகையை வைத்து தலையை பாதுகாக்கிறார்.


இளமை வீறுகொண்டு முறுக்கும் கயிறை, முதுமை அமர்ந்தவாறு ஈடுகட்ட முனைகிறது; அதிலும் இவர் இளமையைக் காட்டியிருக்கும் விதம் அபாரம்; முழுமையாகக் காட்டாமல் கெண்டைக்கால் சதைப் பிடிப்பை வைத்து முறுக்கேறிய அவரது இளமையை உணர முடிகிறது.


தன் கைதான் தனக்கு உதவியாக இருக்க வேண்டுமா ஏன் தன் செயற்கை கால் தனக்கு உதவியாக இருக்ககூடாதா என்று ஒரு படம் சோகத்தையும் சுவைபடச் சொல்கிறது


யானை முகத்தான் கடவுள் என்றால் ஆசிவாங்க ஏன் பயம் என்கிறது ஒருபடம்.


சென்ட்டிலோ, ஏக்கரிலோ எப்படி விற்றாலும் நாடோடிகள் நாங்கள் இலவசமாக உறங்குவது நடுக்காட்டிலேதான் என்கிறனர்.


பாதுகாக்க வேண்டிய பராம்பரிய கட்டிடம் எல்லாம் இப்படி சாணிதட்டி பாழாக்கலாமா என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறது ஒரு படம்


ஏழ்மைக் குடிசையின் வீட்டு வாசலில் எடுத்த படம் ஒன்று; களையிழந்தது வீடு மட்டுமே, இவர்கள் முகங்கள் அல்ல என்று சொல்கிறது.


கோணிப்பைகள் நிரம்பினால்தான் இவர்களில் வயிறு நிறையும்; கொஞ்சம் குப்பையைக் கொட்டுங்கள் என்று கேட்கிறது ஒரு படம்


இருப்பவர்களுக்கு ஊருக்கு ஒரு வீடு இல்லாதவர்களுக்கு எல்லாம் மரத்தடியே வீடு என்று படங்கள் மனதோடு பேசுகின்றன.


உங்கள் மனதோடு இந்த படங்கள் பேசியிருந்தால் அவரிடம் பேசி உங்கள் பாராட்டுதலை பதியுங்களேன்

பா.சேரன் போன் எண்: 9500179791


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.sivagurunathan - coimbatore,இந்தியா
24-பிப்-201218:41:11 IST Report Abuse
A.sivagurunathan my heartly congratulation sir
Rate this:
Share this comment
Cancel
Selvam Rajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201207:53:46 IST Report Abuse
Selvam Rajan congradulation Mr.Murugaraj. I'm also want to see that atrs can you s to this email id : selvaraj86@live.in Selvam Rajan- Dubai, UAE
Rate this:
Share this comment
Cancel
selvi - Palani,இந்தியா
21-பிப்-201207:12:52 IST Report Abuse
selvi மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்