madurai district news | "பாரதி வழியை பின்பற்றுங்கள்'| Dinamalar

தமிழ்நாடு

"பாரதி வழியை பின்பற்றுங்கள்'

Updated : பிப் 22, 2012 | Added : பிப் 19, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மதுரை : "தேசபற்று மற்றும் தெய்வ பக்தியுடன் கூடிய ஒழுக்கம் இருந்தால்தான் தனி மனித வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். தேசபற்று மற்றும் தெய்வ பக்தி மிக்க பாரதியார் வழியை இளையோர் பின்பற்ற வேண்டும்,'' என சுவாமி சிவயோகாநந்தா வேண்டுகோள் விடுத்தார். சின்மயா யுவ கேந்திரா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இனைந்து மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ; "சன்ஸ்க்ருதி" என்ற இரண்டு நாள் நாடக விழா நடந்தது. சின்மயா யுவ கேந்திரா செயளாலர் மருதுராஜன்வரவேற்புரை நிகழ்த்தினார், சின்மய பாலவிஹார் மாணவிகள் விவேகா, அபிநயா இ‌றை வணக்கம் பாடினர். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுவாமி சிவயோகாநந்தா பேசுகையில் : "தேசபக்தி மற்றும் தெய்வ பக்தி மூலம் நம் இதயத்தில் இடம் பெற்றவர் சுப்பிரமணிய பாரதியார். அவரது சுதந்திர வேட்கை கவிதைகள் உலகமே போற்றுகிறது. தேசபற்று இருந்தால் தனி மனித வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். பாரதியார் வழியை இளையோர் பின்பற்ற வேண்டும்,'' என்றார். மேலும், இரண்டு நாள் விழாவனது கனலும் அனலுமாக இருக்கும், என்றார். இவ்விழாவை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து நடத்திய சின்மயா யுவகேந்திரா, சுவாமி சின்மயாநந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் தனது குரு சுவாமி சின்மயாநந்தர் ஒரு கனலாகவும், சின்மயா யுவகேந்திரா ஒரு அனலாக இருக்கும் என்றார்.இசைக்கவி ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாரதி-யார்? நாடகம் நடந்தது.சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வி சுவேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வி நிவேதிதா நன்றி கூறினார். பிப்.,19 மாலை 6.15 மணிக்கு "சூர்யா 108" எனும் நாடகம் நடந்து.இரண்டாம் நாள் விழாவில் சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த விலாசினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், செல்வி அனுத்தமா கடவுள் வாழ்த்து பாடினார், செல்வி நிர்மலாஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் துணை பொது மேலாளர் திரு.பெரியதம்பி கலந்து கொண்டார், வாழ்த்துரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குனர் திரு. கோபாலசுவாமி பேசினார். அதன் பிறகு 'சூர்யா 108' நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் முடிவில் சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வன் சுந்தரமூர்ந்தி நன்றிவுரை நிகழ்த்தினார். 'சன்ஸ்க்ருதி' என்ற இரண்டு நாள் நாடக விழா இனிதே முடிந்தது.இந்நிகழ்ச்சியில் சின்மயா யுவ கேந்திராவின் சென்னை மற்றும் தாமரைபாக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களும் முக்கிய பங்குவகித்தனர். இதற்கு சின்மயா யுவ கேந்திராவின் மாநில அமைப்பாளர் திரு. சுதர்சன், பெரும் பங்கு வகித்தார். மதுரையில் சின்மயா யுவ கேந்திராவுடன் சேர்ந்து சின்மய யுவ வீர் இளைஞர்கள் செந்தில் மற்றும் நரேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு உருதுணையாக இருந்தனர். சின்மயா மிஷனின் ஆச்சாரியா தவத் திரு சுவாமி சிவயோகநந்தா இதற்கெல்லாம் பக்க பலமாகவும், அவருக்கு உருதுணையாக சின்மயா மிஷனின் உறுப்பினர்கள், மற்றும் மகளிர் குழுவின் உறுப்பினர்கள் இருந்தனர். இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் 26 இடங்களில் அரங்கேரியது, இதற்க முழு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தவத் திரு சுவாமி மித்ராநந்தா அவர்கள், இவர் சின்மயா யுவ கேந்ராவின் அகில இந்திய தலைவர் ஆவார். இளைஞர்களை ஆன்மீகத்தின் முலமாக நல்ல எண்ணங்களை மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் ஆகும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnu - Bangalore,இந்தியா
07-மார்-201219:16:00 IST Report Abuse
Chinnu பாரதியார் போன்று மகத்தான தமிழ் கவிஞர் போன நூற்றாண்டில் இருந்தது இல்லை. பாரதியின் தொலை நோக்கு பார்வை, நாட்டு பற்று, பெண்கள் விடுதலைக்கு பாடியவை எல்லாம் தீர்க்க தரிசியாக இருந்து பாடியவை. இன்றும் தமிழ் இளைஞர்கள் பாரதியை ஒரு எடுத்து காட்டாக கொள்ள விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. தன் 35 வயதுக்குள் அவர் எவ்வளவோ சொல்லி விட்டு போய் விட்டார். பாரதியின் கவிதைகளை கேட்கும் போது, தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Wilson - Texas,யூ.எஸ்.ஏ
04-மார்-201205:39:31 IST Report Abuse
Wilson ஜாதிகளை ஒழிக்க அரும்பாடு பட்டவர் பாரதி.. அவர் பட்ட பாடெல்லாம் வீனகபோகியது..
Rate this:
Share this comment
raaki - abcdefgh,அருபா
07-மார்-201221:33:18 IST Report Abuse
raakiஉண்மை. யாரினால்? பாரதி யின் சொந்த கூட்டங்களினால் தான். அவர் பணி செய்து வந்த பள்ளியிலே அவரை விரட்டி sotrukku alaiya விட்டு இன்று சிலை செய்து வைத்து பீற்றி கொள்ளும் காலம் இது. அன்றே பாடினார், இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே. சாதி இரண்டு ஒழிய வேறிலை சாற்றுங்கால் ஆய பயன்??? மெத்த படித்த மேதாவிகள் தான் இன்று சாதியை மேடுறுத்தி நிலை நிறுத்துகிறார்கள். In very soft and psycho way...
Rate this:
Share this comment
Cancel
maruthu - madurai,இந்தியா
02-மார்-201221:33:14 IST Report Abuse
maruthu ஏர‌ேவே ஏராது, பாரதி போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றி நினைப்பு இவர்களின் தலையில் ஏராது. பாரதிக்கு 14ங்கு மொழிகள் தெரியும், ஆதலால்தான் அவன் பாடுகையில் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது கானோம் என்று பாடினான்.
Rate this:
Share this comment
Cancel
Shabaaz - Vellore,இந்தியா
02-மார்-201212:08:18 IST Report Abuse
Shabaaz "தேசபக்தி மற்றும் தெய்வ பக்தி மூலம் நம் இதயத்தில் இடம் பெற்றவர் சுப்பிரமணிய பாரதியார். சொல்லடி சிவ சக்தி , நில சுமை என வாழ்ந்திட புறிகுவாயோ? தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ? எங்கேயா வாழ விட்டோம் பாரதியை? ஜெயா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பாரதியை மறந்து விட்டான் தமிழன். சொல்லடி சிவ சக்தி, வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே1
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
02-மார்-201208:36:56 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN பாரதி வழியை பின்பற்றினால், வறுமை தான் மிஞ்சும். செத்து போனால், நாலு பேர் கூட வர மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
28-பிப்-201205:53:46 IST Report Abuse
T.R.Radhakrishnan பாரதியார் ஆரிய வம்சத்தை சேந்தவர். அவர் சொல்லுவதை எல்லாம் நாங்க கடை பிடிக்க கூடாது. நாங்க கவிதாயினி கனி மொழியின் கவிதைகளை தான் படிப்போம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-பிப்-201214:26:57 IST Report Abuse
Nallavan Nallavanபோட்டுத் தாக்கறீங்களே ராதா...
Rate this:
Share this comment
kavingar.lakshmi kanthan - chennai,இந்தியா
03-மார்-201208:20:15 IST Report Abuse
kavingar.lakshmi kanthanநீங்கள் எந்த குப்பையையும் படியுங்கள் யார் கேட்டது. அதற்காக மகாகவியை குறைத்துப் பேசுவதை ஒத்துக்கொள்ள முடியாது.காக்கை குருவி எங்கள் சாதி என்றவனுக்கு வர்ணச்சயம் பூசும் நீங்கள் அவனைப் பற்றிய புரிதல் இல்லாதவர்....
Rate this:
Share this comment
S.Ganesan - Chennai,இந்தியா
05-மார்-201213:35:04 IST Report Abuse
S.Ganesanபாரதியாரை பற்றி எந்த கழகமாவது பேசியது உண்டா? ஏனென்றால் அவர் வெறும் வாய் சொல் வீரர் அல்ல. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதோடு மட்டும் அல்லாமல் செயலிலும் காட்டியவர். கோவிலுக்குள் செல்லகூடாது என்று தடை செய்தவர்களை மீறி அனைவரையும் கோவிலுக்குள் கூட்டி சென்றவர். ஆனால் அவர் பெயர் வெளிவாராமல் வைக்கத்தில் செய்த செயலை மட்டுமே கொண்டாடிய கழகங்கள் இன்று சாதிகளின் பின்னால் செல்வது வேதனைக்குரியது....
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
28-பிப்-201205:52:38 IST Report Abuse
T.R.Radhakrishnan பாரதியார் பற்றிய செய்தியில் ஆங்கிலத்தில் கருத்து பதிவு. என்ன கொடுமை சரவணன்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-பிப்-201205:35:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார்.. இன்று இந்தியாவில் நடக்கும் இழி செயல்களைப் பார்த்தால் இவர் என்றைக்கோ வெள்ளையருடனோ இல்லை பிரஞ்சு அரசுடனோ சேர்ந்து இந்தியாவை ஆயிரம் முறை எரித்திருப்பார், அழித்து சாம்பலாக்கி இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
மருதுராஜன் - madurai,இந்தியா
27-பிப்-201203:19:32 IST Report Abuse
மருதுராஜன் mohan its true. all things are made for commercial pursose.
Rate this:
Share this comment
Cancel
mohan - Tamilnadu,இந்தியா
26-பிப்-201221:41:11 IST Report Abuse
mohan very true...now a days press in India highlighted and spread only negative news..not constructive side of the society//
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை