கற்றல் அனுபவம் இனிமையாக இருக்க வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு | கற்றல் அனுபவம் இனிமையாக இருக்க வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கற்றல் அனுபவம் இனிமையாக இருக்க வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

Updated : பிப் 19, 2012 | Added : பிப் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை:மாணவர்களின் திறமையை கண்டறிந்து, பெற்றோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு திறமையை வளர்க்க வேண்டும்; மாணவர்களுக்கு கற்றல், ஒரு இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், 16 வது மாநில மாநாடு மற்றும் பொதுச் செயலர் முத்துசாமியின் பவள விழா நடந்தது.


விழாவுக்கு கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்று பேசியதாவது:நாம் எல்லாரும் ஏதாவது ஒரு வகையில், பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். வலை தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி விடுகிறாம். இளைய சமுதாயத்தின் மீதான எண்ணங்கள், அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை, பெற்றோரும் கவனிக்க இயலாத சூழலும் ஏற்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்காவிட்டால், அவர்களது பாதை வன்முறையிலோ வேறு வகையிலோ சென்றுவிடும். பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.


மாணவர்களின் திறமையை வெளிக் கொணர, அவர்களது தோல்வி மனப்பான்மை காரணமாக அமைகிறது; இதை விலக்க வேண்டும். மாணவர்களுக்கு, இயல், இசை, நாடகம், விளையாட்டு போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வாய்ப்பளிக்க வேண்டும். பாடச் சுமையை குறைத்து, கற்றலில் இனிமையை வளர்க்க வேண்டும். குழந்தைகள் ஆறு வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் வளர வேண்டும். ஏழு வயதில் மட்டுமே, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்.


மாணவர்களின் கேள்வியை, ஆசிரியர்கள் உன்னிப்பாக கவனித்து சரியான பதிலளிக்க வேண்டும். அவர்களோடு கலந்துரையாடுவதோடு, மாணவர்கள் கூறும் கருத்துகளையும் கூர்ந்து கேட்க வேண்டும். அப்போது தான், அவர்களின் மனம் அமைதியடைவதோடு, ஆற்றல் வெளிப்படுத்துவதாக அமையும். ஆக்கப்பூர்வமான இளைய சமுதாயத்தை உருவாக்குவதில், ஆசிரியர்களுக்கு பங்கு உண்டு.


ஆசிரியர்கள் கற்பிக்கும் கல்வி, மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாகவும், சிந்திக்கும் திறனை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள திறமையை வெளிக் கொணர பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிப்பதோடு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilar Neethi - Chennai,இந்தியா
20-பிப்-201210:48:56 IST Report Abuse
Tamilar Neethi ஐயா நீங்கள் கற்ற காலம் வேறு . ஆசிரியர்கள் வேறு . வீடு தேடி மாணவர்களை கூட்டிவந்து பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியர்கள் அந்தகாலம். இப்போது வீடுதேடி டியூஷன் சொல்லிகொடுக்க செல்கிறார்கள். முன்பு மாணவன் வளர்ச்சி தான் ஆசிரியர் சன்மானம் . இப்போது வருமானம் பார்க்கதான் ஆசிரியர் தொழில் . மேலும் வருடா வருடம் இடம் மாறுதல் போது அரசியல்வாதிகள் ஆசிரியர்கள் சம்பாதித்த காசினை வாங்கி கொள்கிறார்கள் . இப்பொது பள்ளிகள் ஒரு வியாபார தளம். தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை வேறு . அரசு வேறு நூறுநாள் பள்ளிகளை மூடிவிட்டு குறிகிய காலத்தில் பாடம் நடத்த விரட்டி சனி கிழமை பள்ளிகள் வைத்து மன இறுக்கம் வேலை பளு இப்படி சூழல் ஏற்படுத்தி கொலை சண்டை ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு அறுந்து விட்டது . பெற்றோர் கழகம் ஒரு சால்ரா போல . வசதி உள்ள பெத்தொர்தான் தலைவர் . இதில் வேறு தொடர்பு சாதனம்கள் நிறய அதில் மனம் வேறு சிதறி விடுகிறது . எல்லா சினிமாவும் கொலை வெறிகருத்துடன் களம் இறங்கி மாணவனை தடம் புரள வய்க்கா பலநாள் ஓடுகிறது இல்லை திருட்டு VCD மூலம் மாணவனை அடைகிறது. பிஞ்சில் பழுத்த மாணவர்களை நஞ்சு ஊட்ட பல வழிகள். ஆனல் வழிநடத நேரம் தகுந்த நபர் இல்லை . கல்வித்துறை ஆட்சியளர் கைதடி ஆக மாறி தனி விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு சீரழிகிறது. ஓய்வு இல்லா ஆசிரியர்கள் . ஊடகத்தில் விழும் விட்டில் பூச்சி மாணவமணிகள் . இதை வகைப்படுத்த மன நல வல்லுனர்கள் தேவை. காலம் மாறிபோச்சி . இதில் களமும் மாறிபோச்சி. speed . Competition. Generation gap. Schools look like a business house. Not a place of learning. In this situation need to revise the education tem. E learning, health education, counseling etc must be included as like language classes ...i.e. as compulsory subjects.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை