பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் கொள்ளை:அதிகாலையில் கொள்ளையர்கள் அட்டகாசம்: மூவரில் ஒருவர் சுற்றி வளைப்பு | பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் கொள்ளை:அதிகாலையில் கொள்ளையர்கள் அட்டகாசம்: மூவரில் ஒருவர் சுற்றி வளைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் கொள்ளை:அதிகாலையில் கொள்ளையர்கள் அட்டகாசம்: மூவரில் ஒருவர் சுற்றி வளைப்பு

Added : பிப் 19, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் கொள்ளை:அதிகாலையில் கொள்ளையர்கள் அட்டகாசம்: மூவரில் ஒருவர் சுற்றி வளைப்பு

பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் கொள்ளை:அதிகாலையில் கொள்ளையர்கள் அட்டகாசம்: மூவரில் ஒருவர் சுற்றி வளைப்பு


பண்ருட்டி:பண்ருட்டி அருகே, அதிகாலையில் பெட்ரோல் பங்க்கில், துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களில், ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய இருவரை, ஐ.ஜி., தலைமையிலான போலீசார், முந்திரி @தாப்புகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, கொள்ளுக்காரன்குட்டை சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், வெங்கடேஸ்வரா ஏஜன்சியின் பெட்ரோல் பங்க் உள்ளது.


இங்கு, நேற்று முன்தினம் இரவு, பணியில் ஊழியர்கள் சண்முகம்,45, கார்த்திகேயன்,30, ஆகியோர் இருந்தனர்.அதிகாலை 4.30 மணியளவில், பெட்ரோல் பங்க்கிற்கு நடந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க, 3 மர்ம நபர்கள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோரிடம், திடீரென ஒன்றரை அடி நீளமுள்ள நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி, "பணம் எவ்வளவு உள்ளது எடு' என மிரட்டினர்.


பணம் இல்லை எனக் கூறியதால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டு, கார்த்திகேயன் காலில் கத்தியால் கிழித்தனர். இதனால், பயந்து போன சண்முகம் பீரோ சாவியை கொடுத்துவிட்டார். சாவியை வாங்கிய மர்ம நபர்கள், இருவரையும் ஒயர்களால் கை, கால்களைக் கட்டிப் போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, பீரோவில் இருந்த பணம், 55 ஆயிரத்து 393 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு, 5.15 மணிக்கு தப்பிச் சென்றனர்.


அதிகாலை 5.30 மணியளவில், பாவைக்குளம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன், டீசல் போட பெட்ரோல் பங்க் வந்த போது கதவு மூடப்பட்டிருந்தது. @மலும், உள்ளேயிருந்த கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதால், சந்தேகமடைந்‌த @காபாலகிருஷ்ணன் கதவைத் திறந்து கட்டப்பட்டிருந்த இருவரையும் மீட்டார். பின், காடாம்புலியூர் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.


கொள்ளையர்கள் நடந்து செல்வதால், அதிக தூரம் சென்றிருக்க முடியாது என அறிந்து, மருங்கூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவருக்கு போன் செய்து காரை வரவழைத்து, அடுத்த 10 நிமிடத்தில் காரில் கொள்ளையர்களை விரட்டிக் கொண்டு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் நோக்கிச் சென்றனர். அப்போது, கொள்ளையடித்த மர்ம நபர்கள் மூவரும், @ராட்டில் நடந்து செல்வதைக் கண்டு காரை விட்டு இறங்கித் துரத்தினர்.


அப்போது, கொள்ளையர்கள் கோபாலகிருஷ்ணன் காலில் சுட்டனர். அதற்குள் காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், கண்ணன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து ரோட்டில் ஓடிய மூன்று கொள்ளையர்களை விரட்டியதில், ஒருவரை மட்டும் பிடித்தனர்.
மற்ற இரு கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கியால், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரை நோக்கிச் சுட்டபோது, உடன் அவர் கீழே குனிந்து கொண்டதால் உயிர் தப்பினார். @மலும், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வலது காலில் கத்தியால் கிழித்தனர். இந்த கடும் @பாராட்டத்தில், 7 மணிக்கு ஒரு கொள்ளையன் பிடிபட்டான். விசாரணையில், அவன் திருச்சி ‌மேலகோட்டையைச் சேர்ந்த செல்வம்,25, எனத் தெரியவந்தது.


இதற்கிடையே, கொள்ளையர்கள் சுட்டதில் காயமடைந்த லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன் பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.தொடர்ந்து, காடாம்புலியூர் ஏரிக்கரை, மாம்பட்டு, சின்னப்புறங்கனி பகுதியில், பண்ருட்டி டி.எஸ்.பி., ஆரோக்கியம் தலைமையிலான, 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் போலீசார் தப்பியோடிய @மலும் இரண்டு கொள்ளையர்களைத் தேடினர்.


மேலும், ஐ.ஜி., சைலேந்திரபாபு மற்றும் எஸ்.பி., பகலவன் தலைமையில், 120க்கும் @மற்பட்ட போலீசார் முந்திரிகாடு, கரும்புத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், கொள்ளையர்கள் பதுங்கியிருக்கக் கூடும் என்பதால், அவர்களை வளைத்துப் பிடிக்க முகாமிட்டுள்ளனர்.
கைரேகை நிபுணர் வெங்க‌டேசன் தலைமையிலான குழுவினர், பெட்ரோல் பங்க்கில் தடயங்களைச் சேகரித்தனர்.


துப்பாக்கியால் சுட்டதும்மயங்கி விழுந்தேன்...:துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், லாரிக்கு டீசல் போடச் சென்றோம். ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கிருந்த அறை இருட்டாகக் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது, கைகள் கட்டப்பட்ட நிலையில், பங்க் ஊழியர்கள் இருந்தனர். என்னவென்று விசாரித்த போது நடந்த சம்பவத்தைக் கூறினர். தொடர்ந்து, அருள்செல்வம் என்பவர் உதவியோடு கொள்ளையர்களை பிடிக்க காரில் சென்றோம். காடாம்புலியூரில் இருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்தோம். அங்கு கீழே கிடந்த கம்பியால் ஒருவனைத் தாக்கினேன். அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால், எனது வலது காலில் சுட்டதும் மயங்கி விழுந்தேன்.


போலீசார் கோட்டை விட்டதேன்?துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்களை பிடிக்க, போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி இல்லாமல் சென்றதால், அருகில் இருந்த கொள்ளையர்களை கூட பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.முந்திரி காட்டில், தப்பியோடிய கொள்ளையர்கள் இருவரில் ஒருவன் துப்பாக்கியுடனும், மற்றொருவன் கத்தியுடனும், 10 மீட்டர் தொலைவில் சென்றனர். ஆனால், டி.எஸ்.பி., கையில் துப்பாக்கி இல்லை. இதை கண்ட கொள்ளையர்கள், போலீசாரை சிறிதும் சட்டை செய்யாமல் தப்பிச் சென்றனர்.ஐ.ஜி., சைலேந்திரபாபு விசாரணையின்போது, "போலீசார் ஏன் துப்பாக்கியை எடுத்துச் செல்லவில்லை' என கேள்வி எழுப்பினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mokini - ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201209:41:53 IST Report Abuse
mokini இவனை எல்லாம் அவன் கொண்டுவந்த துப்பாக்கியால் போட்டு தள்ளனும்அப்பத்தான் இவனை மாதிரி உள்ள துப்பாக்கி திருடனுகளுக்கு நெஞ்சில் பயம் வரும்திருட்டு ராஸ்கோலு.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-பிப்-201207:20:59 IST Report Abuse
Lion Drsekar இவ்வளவு கடும் போரத்தரிக்குப் பின்பு இவர்களை நீங்கள் பிடித்துள்ளீர்கள் அனால் இவர்கள் ஒரு நிரபராதி, காவலர்கள் வேண்டும் என்று இவர்கள் மேல் பொய் வழக்குப் போட்டுள்ள்ளனர் என்று கூறி வெளியே வரப்போகிறார்கள் . அல்லது சிறைக்குச் சென்றால் இவர்களுக்கு அனைத்து வித உபசாரத்துடன் அதிநவீன வசதியுடன் கூடிய சிறந்த உணவு, மற்றும் அனைத்து வசதிகளுடன் வாழப்போகிறார்கள், தவறு செய்பவர்களுக்கு தண்டனை என்று யார்தான் தரப்போகிறார்கள்? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
20-பிப்-201205:53:13 IST Report Abuse
K.Sugavanam துப்பாக்கி சுட்டா அப்புறம் போலி என்கவுண்டருன்னு தோழர்களும்,மற்றவர்களும் பொழம்புவான்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை