no action against innocent : Ponmudi | போலி சான்று மாணவர்கள் கதி என்ன? அமைச்சர் பொன்முடி பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலி சான்று மாணவர்கள் கதி என்ன? அமைச்சர் பொன்முடி பேட்டி

Updated : ஜூலை 17, 2010 | Added : ஜூலை 16, 2010 | கருத்துகள் (32)
Advertisement
போலி சான்று,மாணவர்கள்,அமைச்சர், பொன்முடி,no action, innocent,Ponmudi

சென்னை : ""போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கவுன்சிலின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கவுன்சிலின் துணைத் தலைவர் பழனிச்சாமி, உறுப்பினர் செயலர் சமியுல்லா, உயர்கல்வித் துறை செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கருணாகரன், தங்கராஜ், தேவதாஸ் மனோகரன், காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, தற்போது 500 கல்லூரிகள் உள்ளன. நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏழு லட்சம் மாணவர்கள், பொறியியல் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.  இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், தமிழகத்தில் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, பன்னாட்டு அளவில் பொறியியல் கல்வியின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த தொழில்நுட்ப கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.  ஐந்து அண்ணா பல்கலைக் கழகங்களை இக்கவுன்சில் ஒருங்கிணைத்து செயல்படும். தனியார் கல்லூரிகளில் எம்.இ., - எம்.டெக்., படித்து முடித்தவர்கள் நேரடியாக ஆசிரியர் பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு கவுன்சில் மூலம் நவீன கற்பித்தல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். தன்னாட்சி கல்லூரிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் பணியிலும், கட்டண கண்காணிப்புப் பணியிலும் கவுன்சில் ஈடுபடும். 


சிவில், மெக்கானிக்கல் பிரிவைத் தொடர்ந்து, பிற பிரிவுகளிலும் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்குவது, அதற்கான பாடத்திட்டம், புத்தகங்களை உருவாக்குவது ஆகிய பணிகளிலும் கவுன்சில் ஈடுபடும். போலி சான்றிதழ்கள் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோர் பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றால் தான் முதல் தலைமுறை பட்டதாரிகள்.  பொறியியல் கவுன்சிலிங்கில், 78 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி சலுகைக்கு விண்ணப்பித்திருப்பது, இத்திட்டத்திற்கு எந்தளவு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. இவ்வாறு பொன்முடி  கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-201019:53:26 IST Report Abuse
இருபத்தி ஏழாம் கைப்புள்ள இது நீதிபதி வேலை. இந்தியாவில் மட்டும் தான் முதலமைச்சர்/அமைச்சர் நீதிபதியாவது/போலிசாவது நடக்கும். எப்ப தான் இவங்கள் திருந்துவாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
INDRAJIT - Benares,இந்தியா
18-ஜூலை-201020:37:21 IST Report Abuse
INDRAJIT "போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' இவ்வளவு விஷயம் தெரிஞ்சு ஒப்பநாச் சொல்றீங்கன்னாக், கண்டிப்பாத் தண்டிக்கப்பட வேண்டியது யாருன்னும் ஒங்களுக்குத் தெரிஞ்சே இருக்கணும் ! அதையுந்தான் புட்டுப் புட்டு விலாவாரியாச் சொல்லிப் போடுங்களேன் மைந்திரி ஸாரு ! (உள்ளுக்குள்ளே ) எந்தப் புத்துக்குள்ளே, எந்தப் பாம்போ, என்ன கண்றாவியோ ! பாம்புங் கால் பாம்புக்குத்தானே தெரியும் ? என்ன நண்பர்களே நாஞ் ஜோல்றது !
Rate this:
Share this comment
Cancel
R.Krishnamurthy - Bangalore,இந்தியா
17-ஜூலை-201021:07:58 IST Report Abuse
R.Krishnamurthy ... மார்க் வழங்குவதில் தப்பு [தெரிந்தோ ,தெரியாமலோ ] செய்தால் ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கிறது. இதை பெற்றோர்கள் பாராட்டுகிறார்கள். அதேபோல் லக்ஷகணக்கான மாணவ மாணவியர்களின் முன்னேற்றதை தடுத்த பெற்றோர்கள் கடுமையான தண்டனை பெற வேண்டும் அன்றோ ???
Rate this:
Share this comment
Cancel
R.Krishnamurthy - Bangalore,இந்தியா
17-ஜூலை-201021:00:14 IST Report Abuse
R.Krishnamurthy .... பெற்றோல்கள்தன் முதல் குற்றவாளிகள்.அவர்கள் ஒன்றும் தெரியாமலா பணம் கொடுத்து தன மக்களுக்கு சீட்டு வாங்கியதோடு நல்ல மார்க்கு வாங்கிய மற்ற மாணவ மாணவியர்கள் சீட்டு கிடைப்பதையும் தடுத்து அவர்கள் எதிர்காலத்துடன் விளையாடி விட்டனர்
Rate this:
Share this comment
Cancel
வஸ். thirumalai - tiruppur,இந்தியா
17-ஜூலை-201020:44:49 IST Report Abuse
வஸ். thirumalai 2003 வருடத்திலிருந்து இந்த விவகாரம் நடந்திருகிறது , அதலால் உடனடியாக 2003 பிறகு சேர்க்கை ஆன அனைத்து மாணவர்கள் marksheet ஐயும் மீண்டும் பரிசோதனை செய்ய அரசு உத்திரவு இடவேண்டும் !!!!தவறான மாணவர்கள் ,பெற்றோர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் !!! அவர்கள் இதுவரை படித்த படிப்பை ரத்து செய்ய வேண்டும் ! இந்த தவறால் எத்தனை மாணவர்களுக்கு டாக்டர் வாய்ப்பு பறிபோனதோ ??? இதற்கு அந்த துறை மந்திரி முதல் கொண்டு மற்ற அதிகாரிகளும் அபராதம் செலுத்த வேண்டும் !!!
Rate this:
Share this comment
Cancel
Rony - makati,பிலிப்பைன்ஸ்
17-ஜூலை-201020:37:04 IST Report Abuse
Rony you know we are blaming people and students for this.. but first we should see what is our education structure?.... From L.K.G to 12th class our education system is completely asking every student to Memorize without even any proper practical teaching... Teachers are forcing the students to memorize and vomit everything in the exams ..day by day people getting 100 marks out of 100 marks are increasing as well as they don't have deep knowledge in the subject.. so there is no value for marks now .. people who can able to memorize and vomit properly gets high scores and nice college .. people who are not capable for memorizing will fail continuously and they will start thinking about making duplicate mark sheets like this ... first change the education system in India.. make students study for their life not for marks and exams .. Teachers should create interest among students to learn and discover new things .. then you will be seeing a college or school without absentees and without failing students ... God bless India... dinamalar please change my present country to Philippines .. Tamil spelling is wrong .. !!!!
Rate this:
Share this comment
Cancel
manithan - kano,இந்தியா
17-ஜூலை-201020:15:34 IST Report Abuse
manithan தவறு செய்தவன் மனிதன்.தவறு செயாதவன் கடவுள். நாம் மனிதனா ? கடவுளா ?
Rate this:
Share this comment
Cancel
பாலா - Bangalore,இந்தியா
17-ஜூலை-201019:30:17 IST Report Abuse
பாலா ஒரு வருடம் suspend கொடுக்கலாம். அனாலும் improvement எழுத chance கொடு. அவன் சும்மா இல்லாம படிக்கட்டும் next year he/she can join the college with existing original mark or improvement mark. so He can become a good student same time he improved his knowlege to get the seat next year. but he is LOOSING A YEAR BECAUSE OF HIS MISTAKE. I think many of you accept my idea!!! hope so
Rate this:
Share this comment
Cancel
ப.chandrasekaran - california,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201019:14:22 IST Report Abuse
ப.chandrasekaran இந்த பொன்முடி என்ன சொல்கிறார் என்று புரிய வில்லை.போலி மார்க் சீட் மார்க்கெட்டில் கூவி விற்கிறார்களா? பொன்முடி சொல்லும் அப்பாவி பற்றோர்களும் மாணவர்களும் கேப் மாறிகள் .எல்லோரும் போலி மார்க் சீட் ரெடி செய்து இன்ஜினியரிங் ,மருத்துவம் அன்று சேரலாமே?அதயும் கட்சி காரங்களுக்கு contract கொடுத்துவிடலாம் . பொன்முடிகு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
arunkumar - pondicherry,இந்தியா
17-ஜூலை-201017:22:11 IST Report Abuse
arunkumar both parents& students must be punished. this type of idiot minister must also to be punished.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை