பனாஜி:கோவா சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஏழைகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் என்பது உட்பட பல வாக்குறுதிகள் அதில் அளிக்கப்பட்டுள்ளன.கோவா சட்டசபைக்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:டூ மாநிலத்தில் வீடு வசதி இல்லாத பிரச்னையை சரிக்கட்ட, 5,000 அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தொடர் வீடுகள் கட்டித் தரப்படும். வீட்டு வசதி கழகம் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் இது நிறைவேற்றப்படும்.
நிலம் தொடர்பான தகராறுகளைத் தீர்க்க, விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும்.குடிசைகள் இல்லாத மாநிலமாக கோவா மாற்றப்படும்.மாநிலத்தில் ஏழைகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்; அத்துடன் இலவச குடிநீரும் வழங்கப்படும்.மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலன் பெறுவது, தற்போதுள்ள 1.2 லட்சத்தில் இருந்து, ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தயானந்த் நிராதர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர அலவன்ஸ், 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது உட்பட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.