இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்!| Dinamalar

இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்!

Added : பிப் 21, 2012
இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்!

"காதலில் சொதப்புவது எப்படி" படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தனது முதல் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்.

சித்தார்த்-அமலா பால் கூட்டணியில் தமிழில் "காதலில் சொதப்புவது எப்படி" என்றும், தெலுங்கில் "லவ் பெயிலியர்" என்ற டைட்டிலிலும் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியிலும் விரைவில் எடுக்க தயாரிப்பு தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. அதை இயக்கும் வாய்ப்பும் பாலாஜி மோகனுக்கே வந்துள்ளது.

சூட்டோடு சூடாக பணிகளை ஆரம்பிக்கும் மும்முரத்தில், பாலாஜி மோகனை உடனடியாக ஐதராபாத்துக்கு வரச்சொல்லி தயாரிப்பு நிறுவணம் அழைக்க, பாலாஜி மோகனும் ஐதராபாத் பறந்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X