E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2012,02:50 IST
கருத்துகள் (295)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்: கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார்

எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்: சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர்.

மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் : என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் : சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே

Advertisement

போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர்
போலீஸ் தமிழக போலீசார் நடத்திய
என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் : சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.


மேலும் சம்பவம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (295)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasu - singapore,சிங்கப்பூர்
24-பிப்-201214:23:34 IST Report Abuse
vasu தமிழக போலிசின் இந்த செயலை எல்லோரும் பாராட்டியே ஆகவேண்டும், சட்ட விரோத செயல் புரிவோர் எல்லோரும் இவ்வாறே தண்டிக்க பட வேண்டும், அப்போது தான் நம் நாட்டின் குற்றங்கள் அறவே ஒழியும். சட்டமும் போலீசாருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். என்னுடைய கணிப்பு படி இது போன்று அணைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுத்தால் நம் நாடு பத்தே ஆண்டுகளில் சிங்கப்பூரை போன்று மாறிவிடும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
yoga - chennai,இந்தியா
24-பிப்-201206:03:02 IST Report Abuse
yoga i லவ் டு தமிழ் நாடு police
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
24-பிப்-201205:33:41 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் தமிழக காவல் துறையினர் என்றாலே தவறு செய்ய்பவர்கல்லுக்கு எல்லாம் ஒரு பயம் இருந்தது. கடந்த சில வருடங்களாக அது இல்லாமல் இருந்தது, தற்போது தமிழக கால்வதுரை தன்னுடைய திறமையை வெளிப்படுத்து மீண்டும் தங்களை பற்றியா பயத்தை(தவறு செய்பவர்கல்லுக்கு) உணர்த்தி விள்ளனர். அதற்க்கு நான் காவல்துறையினரை மனதார பாராட்டுகிறேன். இப்படிக்கு, ரவிச்சந்திரன் முத்துவேல் கரூர், தமிழ்நாடு, இந்தியா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mouriyan - Chicago,யூ.எஸ்.ஏ
24-பிப்-201205:25:33 IST Report Abuse
Mouriyan Leave apart politicians and corporates who dont allow our country and people to grow. Tamil Nadu Police is atleast trying their best to protect common people and their hard earned money. I don&39t know how many of you who have posted comments here have worked 8 - 10 hours a day in a agricultural field/mills etc to earn Rs.120 - 200 /day. Those people&39s only option to save little by little for a huge sum. If the heartless robbers take their savings away, it is called sucking their blood. Those leeches need to be removed from the society that&39s what police has done. I see references to 2g spectrum scam, honestly, how many of us understand the use of 2g spectrum and how so much money is portrayed for this. If Police is able to protect a society where one can take their hard earned money home without being robbed, I would salute them whole heartedly.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
janani - peravurani  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201222:29:20 IST Report Abuse
janani salute to chennai police
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N R Ravisankar - coimbatore,இந்தியா
23-பிப்-201219:49:21 IST Report Abuse
N R Ravisankar என்கௌன்ட்டர் இல்லமால் உயிருடன் பிடித்திருக்க வேண்டும். காவல் துறை அவசரப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. கொலையாளியின் போட்டவை போட்டவுடன் எப்படி என்கௌன்ட்டர் சாத்தியம் ஆகும்? கிரஹிக்க முடியாத செயலாக உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
23-பிப்-201221:26:16 IST Report Abuse
BebetoNR ரவிசங்கர் போன்ற சொம்புகள் இருக்கும் வரை, நாடு உருப்படாது. கொலை கொள்ளை நடந்து கிரிமினல்கள் வெற்றி பெற்றால்,, உடனே "சட்டம் ஒழுங்கு சரியில்லை " என புலம்புவார்கள். போலீஸ் வெற்றி பெற்றால் உடனே மனித உரிமை பற்றி பேசுவார்கள். சரி, போலீஸ், ராணுவ இலாக்காவை மூடுங்கள். அப்பத்தான் இவங்களுக்கு புத்தி வரும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
23-பிப்-201221:56:43 IST Report Abuse
TamilArasanதவறுதலா உங்களுடைய கருத்துக்கு தம்ப்ஸ் அப் செய்து விட்டேன்....சட்ட விரோத கும்பல் அனைவரையும் போட்டு தள்ள வேண்டும்...வாழ்த்துக்கள் காவல் துறை.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
balagiri - Chennai,இந்தியா
23-பிப்-201219:17:52 IST Report Abuse
balagiri மனித உரிமை மீறல் என்று ஜு வீ காரன் மதுரை மார்க்ஸ் கூட இரண்டு வாரம் பக்கங்களை நிரப்ப புல்லாங்குழல் ஊதுவான், மனித உரிமை பற்றி பேசுபவர்கள் அதை படித்து மகிழலாம், கமிஷனர் கிருத்துவராக இருந்தால் மார்க்ஸ் வேறு மார்கமாக பதில் சொல்லுவார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
N R Ravisankar - coimbatore,இந்தியா
23-பிப்-201221:47:59 IST Report Abuse
N R Ravisankarதங்கள் கூறுவது சரிதான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த என்கௌன்ட்டர் தப்பு என்று தீர்ப்பு வந்து விட்டால் அம்மா அவர்கள் வீட்டுக்கு போகவேன்டியதுதான் ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nishanthan Sathananthasivam - luhansk ,உக்ரைன்
23-பிப்-201219:03:07 IST Report Abuse
Nishanthan Sathananthasivam கொல்லபட்டவர்கள் - 14+27 லட்சம் கொள்ளையடித்தவர்களாம்... அவர்களை பிடித்து ஒரு விசாரணை, வழக்கு என எதுவும் இல்லை... நேரடியாக மரண தண்டனை... கொன்ற கூட்டத்தின் தலைவி... பல லட்சம் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்து... வழக்கு, கைது, விசாரணை என 16 ஆண்டுகள் இழுத்தடித்து... சட்டத்தின்... நீதியின் சந்து பொந்துகளில் ஓடி கொண்டு இருப்பவர்... வாழ்க மனித உரிமை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
23-பிப்-201221:19:38 IST Report Abuse
Bebetoஇந்த "மனித உரிமை, மனித உரிமை" என்று பிதற்றுவர்களையும் சேர்த்து என்கவுண்டரில் போட வேண்டும் . இல்லையேல் சீனாவுக்கு அனுப்ப வேண்டும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
23-பிப்-201218:32:16 IST Report Abuse
Babu. M ஏய் பன்னாடை பாண்டியன் அப்போ spectrum கொள்ளைக்கு என்ன தண்டனை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
jaim - thanjavur,இந்தியா
23-பிப்-201217:42:22 IST Report Abuse
jaim மக்கள் பணத்தை வங்கியில் கொள்ளை அடித்தவர்களை சுட்டுகொன்றால் என்ன.... இல்ல, கல்லால அடிச்சு கொன்னாதான் என்ன....? ஒருவேளை கோடி கோடியாய் கொள்ளை அடித்துவிட்டு அரசியல் வியாதி(?) என்ற போர்வையில் சுதந்திரமாக உலவிக்கொண்டு இருக்கிறவர்கள் மத்தியில் சில லட்சங்களை ஐந்து பேர் சேர்ந்து ஆட்டைய போட்டதுக்கெல்லாம் சுட்டுக்கொல்றது கொஞ்சம் ஓவர்னு யாராவது கூறினீர்கள் என்றால் அது நியாயம் >>>
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.