Colelct TTS from M.L.A., M.P.,s : Plea filed in Hc | "எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் வருமான வரி வசூல் செய்யுங்கள்'| Dinamalar

"எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் வருமான வரி வசூல் செய்யுங்கள்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: எம்.பி.,க்களுக்கு, 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐந்து லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், ஓராண்டுக்கு சம்பளமாக வருகிறது. இந்த பணத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்வதில்லை.எட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு "பான்' எண் இல்லை. 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களாக இருந்த வேல்முருகன், டில்லிபாபு, பாலபாரதி, உலகநாதன், லீமா ரோஸ், அமரமூர்த்தி, செந்தில்பாலாஜி, சின்னசாமி ஆகியோருக்கு "பான்' எண் இல்லை. சிவானந்தம், ஜி.கே. மணி, தமிழரசு, தாமோதரன், துரைகண்ணு, கருப்பசாமி ஆகியோர், தங்களுக்கு வருமானம் இல்லை என கூறியுள்ளனர். 47 எம்.எல்.ஏ.,க்கள் வருமானத்தை குறைவாக காட்டியுள்ளனர்.


செல்வப் பெருந்தகை, 2007-09ம் ஆண்டுக்கு, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. வருமான வரி செலுத்துவதில் இருந்து ரவிகுமார் என்பவர் விலக்கு அளிக்க கோரியுள்ளார். எம்.பி., தம்பிதுரையும், 2009ம் ஆண்டு முதல் "பான்' எண் இல்லை என கூறியுள்ளார். முன்னாள் எம்.பி., தனராஜ், 2008-09ம் ஆண்டுக்கு, 35 ரூபாய் தான் வரி செலுத்தியுள்ளார். ஆனால், அந்த ஆண்டில் அவரது வருமானம், மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் செய்யவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய உத்தரவிட வேண்டும். 2006ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலும், வரி செலுத்தாத, எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்களிடம், வருமான வரி வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, வரும் 13ம் தேதி விசாரிப்பதாக, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' தெரிவித்தது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Kumar Thangarajan - saalmiya,குவைத்
04-மார்-201201:50:59 IST Report Abuse
Raja Kumar Thangarajan அம்மாவின் நேர்மை க்கு பாராட்டுகள்
Rate this:
Share this comment
Cancel
panaieari - Maldives,மாலத்தீவு
03-மார்-201220:17:31 IST Report Abuse
panaieari எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பி கடந்த காலத்துக்கும் கேட்ட வேண்டிய incometax and interetest for delayed payment and penalty எல்லாம் சேர்த்து கட்ட சொல்ல வேண்டும். சட்டம் எல்லாருக்கும் சமம் தானே?
Rate this:
Share this comment
Cancel
SRK - chennai,இந்தியா
03-மார்-201218:51:13 IST Report Abuse
SRK வருமான வரி என்பது யாருக்கு வருமானம் வந்தாலும் கட்ட வேண்டும். ஆனால் ஏன் அரசியல் வாதிக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும். உண்மையில் பார்த்தல் அரசியல் வாதி தான் அதிக பணம் பண்ணுகிறார்கள் குறுகிய காலத்தில்.
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
03-மார்-201216:11:51 IST Report Abuse
A R Parthasarathy ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்று ஊரெல்லாம் கூவிக்கொண்டு இருப்பதைவிட உருப்படியான காரியம் செய்திருக்கிறார் தலைவர் செல்வராஜ் அவர்கள். உண்மையிலேயே நல்ல தொண்டுதான் செய்திருக்கிறார் அவர். அது கிடக்கட்டும் வருமானவரித்துறை என்று ஒன்று இருக்கிறதே அதன் கண்ணில் இதெல்லாம் படுவது இல்லையா? சில நாட்களுக்கு முன்புதானே அவர்களுடைய டார்கெட்டை ரீச் பண்ண முடியவில்லை என்று செய்தியை பார்த்தேன்? மக்கள் பணத்தில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் இதுநாள் வரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? மற்ற வருமானத்தை வேண்டுமானால் அரசியல் வாதிகள் மறைத்துவிடலாம். சம்பளம் என்பது மக்கள் பணத்திலிருந்து அவர்கள் பெறுவதுதானே? அதை வழங்கும் போதே TDS பிடித்தம் செய்வது இல்லையா ஆட்சியாளர்கள் நடைமுறையில்? அவர்களுக்கென தனியாக சலுகைகள் ஏதேனும் உள்ளதா? வருமானம் என்று உள்ளவர்கள் ரிட்டர்ன் சமர்ப்பிப்பது வடிக்கைதனே. ஜகஜீவன் ராம் மாதிரி இவர்களும் மறதி உள்ளவர்களாக இருக்கிறார்களா? ஒருவேளை மொத்த வருமானத்தையும் சேர்த்து ஆடிட்டர் மூலமாக தங்கள் கணக்கை சமர்பிகிரர்களா? சாதாரண அலுவலர் கணக்கை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு டிமாண்டு நோட்டிஸ் அனுப்பும் வருமானவரித்துறை இவர்களுக்கு ஏன் அனுப்புவதில்லை? செல்வராஜ் கொடுத்திருப்பது தமிழகத்தில் உள்ள ஒருசில அரசியல்வாதிகளின் பட்டியல் மட்டுமே என்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் இன்னும் எத்தனை எமற்றுப்பேர்வழிகள் இருக்கிறார்களோ? அவர்களை எல்லாம் விரட்டிபிடித்தலே மத்தியஅரசு கஜானா நிரம்பி வழியுமே. வருமானவரித்துறை கோர்ட் நடவடிக்கை எடுக்க சொல்லும் முன்பாகவே தானே முன்வந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் நாட்டிற்கு நல்லது. செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
thesaapimaani - chennai ,இந்தியா
03-மார்-201215:56:14 IST Report Abuse
thesaapimaani இவர்களுக்கு சம்பளம் பட்டுவாடா பொறுப்பு வகிக்கும் அதிகாரியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Deepak Paiya - Mumbai,இந்தியா
03-மார்-201214:30:06 IST Report Abuse
Deepak Paiya இதானா சார் உங்க "டக்கு"
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
03-மார்-201213:52:52 IST Report Abuse
Tamilar Neethi ஓசி பயணம் . கிம்பளம் . சம்பளம் . இப்படி வாங்கி புட்டு அதற்கு வரி கட்டாவிடில் தவறுதான் . எல்லா முன்னாள் இந்நாள் CM , அமைச்சர்கள் , PM , இப்படி எல்லோருக்கும் இப்படி ஒரு ஆப்பு வைத்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் திரு செல்வராஜ்பெயரை பார்த்தல் தமிழர் போல தெரிகிறது . இந்தியா பூர ஆப்பு வைத்து புட்டார் . சட்டசபை செயலர் , பாராளு மன்ற செயலர் எல்லோரும் இவர்களை தேடி பிடித்து வசூல் பண்ண வேண்டும் . எப்படி செய்வார்கள் . ஒருவேளை இவர்கள் வரி கட்ட வேண்டாம் என்று அவசர சட்டம் என்றினாலும் ஏற்றுவார்கள். தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவந்த விளைவு இப்போதுதான் இந்த அரசியல் வாதிகளுக்கு புரியும் . இதில் வேறு லோக்பால் லோகாய்த் வாசல் வரை வந்து கதவு திறக்க காத்திருக்கு? இது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி . ஆமா செல்வர்ராஜ் வீட்டுக்கு காவல் போடுங்கள். இவர் ஒரு அன்னா தான் . இல்லை நம் நாட்டு எழுதாத சட்டபடி என்கௌண்டர் எதவது செய்து வீடாதீர்கள்? தினமலர் இவரின் படம் வெளியடவில்லை . அதானால் பாதுகாப்புதான் . நீதி அரசர்கள் இவருக்கு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது . இப்பொது நம் காவல்துறை கொஞ்சம் வேகமாய் இருக்கு. எப்படியும் இந்த ஒரு தீர்ப்பால் பல பல கோடி 1947 முதல் இன்றுவரை TDS வசூல் செய்தால் கிடைக்கும். 13 .03 .2012 சென்னை இந்தியாவிற்கு ஒரு பாடம் சொல்லும் . இன்னல் ஆளுநர்கள் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் வரிபாக்கி வச்சிரிகாங்கோ. வசூல் வேட்டைதான் ? ஆமா இந்த வருமான வரி துறை என்ன செய்து கொண்டிருந்தது . ஆளும் கட்சி சொன்னால் எதிர்கட்சி காரர்கள் வீட்டில் ரைட் நடத்துவதுதான் . அப்புறம் தூக்கம் ?
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
03-மார்-201212:56:03 IST Report Abuse
Dhanabal சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பான் கார்டு வைத்துகொள்ளவில்லை என்பதும் வருமான வரி செலுத்தவில்லை என்பதும் வெட்ககேடான விஷயம் . கமிஷன், கட்டிங் பெறுவதில் காட்டும் ஆர்வத்தை அரசுக்கு சேர வேண்டிய வரியை செலுத்துவதிலும் இவர்கள் காட்ட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Shrinivas Babu - Hyderabad,இந்தியா
03-மார்-201211:17:01 IST Report Abuse
Shrinivas Babu புதிய சட்டப்படி அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆனால் ஐந்து வருடம் எம் எல் ஏ அல்லது மந்திரியாக இருந்தால் அவர்கல்லுகு ஓய்வூதியம் கிடைக்கும். வாழ் நாள் முழுவதும் அரசுக்காக பணியாறிய ஊழியருக்கு ஓய்வூதியம் கிடையாது. என்ன கொள்கை.
Rate this:
Share this comment
Gowtham - chennai,இந்தியா
03-மார்-201212:24:01 IST Report Abuse
Gowthamஒரிரு நாட்களே மந்திரி பதவியில் வகித்து வந்தவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். அரசு உழியர்களுக்கு கிடையாது. என்ன கொள்கை இது - என்ன கொடுமை சார் இது...
Rate this:
Share this comment
Cancel
Kowsik Rishi - Chennai,இந்தியா
03-மார்-201211:08:07 IST Report Abuse
Kowsik Rishi சீக்கிரம் செய்யுங்கள் அரசியல் வாதிகள், அரசு பாணியாளர்கள் ஒன்றும் வேறு கிரக ஆள்கள் அல்ல நாட்டில் இவர்களும் குடிமக்களே முதலில் இவர்களிடம் தான் வரி எடுக்கப்படவேண்டும் இவர்கள் பிறகு என்ன தகுதியில் மக்கள் தலைவர்கள், என்று நடக்கிறார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாருக்கும் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.