ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரம்: பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது வழக்கு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேட்டூர்: வழக்கு தொடர்பாக கொடுத்த ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூர் தாலுகா, கருங்கல்லூரை சேர்ந்த குப்புசாமி மனைவி குஞ்சம்மாள் (45). மேச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் அருணாசலம், வேலு. கருங்கல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ், குமார் ஆகியோருக்கும், குஞ்சம்மாளுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது.


இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட முடிவு செய்த குஞ்சம்மாள் வக்கீல் அருணாசலம் உதவியை நாடியுள்ளார். மேலும் வழக்கிற்கு தேவைப்படும் என்பதால் பிரச்னைக்குறிய நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி மேட்டூர் சப்-கோர்ட் முன் வக்கீல்கள் அருணாசலம், வேலு நின்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த குஞ்சம்மாள் வழக்கு சம்பந்தமாக கொடுத்த நிலம் சம்பந்தமான ஆவணங்களை திரும்ப தருமாறு வக்கீல்களிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக வக்கீல்களுக்கும், அவரது கட்சிக்காரரான குஞ்சம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


அப்போது வக்கீல் அருணாசலம் திடீரென குஞ்சம்மாளை விறகு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.நெற்றியில் தாக்கியதால் காயம் அடைந்த குஞ்சம்மாள் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, அருணாசலம், வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.