Need more intention in ground water | நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்

Updated : ஜூலை 19, 2010 | Added : ஜூலை 18, 2010 | கருத்துகள் (11)
Advertisement

இந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.


இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர  மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.


ஆகவே  நிலத்தடி நீர் பற்றி  அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.


உதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது.  சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர். 


மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.


வாஸ்து காரணம் காட்டி  கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...
* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.
* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.
*  அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.
 ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது.  இப்படிசெய்வதால்,   மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.


-சேகர் ராகவன்-


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganeshan - dohaqatar,இந்தியா
20-ஜூலை-201001:47:14 IST Report Abuse
r ganeshan நல்ல சிந்தனை மக்களுக்கு ஆனால் அரசியல்வாதிக்கு அது வராது. கொள்ளையடிப்பது எப்படியென்பதுதான் சிந்தனை. சீனாவில் பதுவருடங்களுக்கு பிறகு தண்ணீர் பிரசினை வரும். அதற்க்கு இப்பவே அனை கட்டுகிராகள். அது நாட்டு பற்று
Rate this:
Share this comment
Cancel
rahman - Bnagkok,தாய்லாந்து
19-ஜூலை-201023:15:37 IST Report Abuse
rahman good idea for save water
Rate this:
Share this comment
Cancel
IRSH - Vellore,இந்தியா
19-ஜூலை-201020:34:27 IST Report Abuse
IRSH பிற செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தை வாசகர்கள் இந்த செய்திக்கு தரவில்லை, வருங்காலத்தில் தண்ணீருக்காக அண்டை நாடுகளுடன் போர் செய்ய நேரிடும் என்று சில நாட்களுக்கு முன் அப்துல் கலாம் சொன்னதை மறந்து விட்டார்கள். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து திட்டங்களை வகுக்கவேண்டும், வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-201016:41:54 IST Report Abuse
M  இந்தியன் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஒரு அற்புதமான திட்டம். நிலத்தடி நீரை காக்க ஒரு அறிவியல் பூர்வமான திட்டம். எந்த நிலையிலும் தோற்காத திட்டம். அனைவரும் செயல் படுத்தக்கூடிய திட்டம். தொலைநோக்கு திட்டம். எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ள திட்டம். இதை உருவாக்கிய வல்லுனர்களுக்கும் அதை தமிழ்நாட்டில் செயல்படுத்திய ஜெயாவுக்கும் வாழ்த்துக்கள். ஆயிரம் இலவச திட்டங்கள் கொண்டுவந்தாலும் இந்த ஒரு திட்டத்துக்கு ஈடுசெய்ய முடியாது. இதை அனைவரும் அவரவர் வீட்டில் செயல் படுத்தவேண்டும். குறிப்பாக சென்னை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட, கட்டிடங்கள் அதிகம் கொண்ட நகரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் மேல் இத்திட்டத்தை கட்டாயம் திணிக்க வேண்டும். இல்லை எனில் சென்னைக்கு சந்திரமண்டலத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவந்தாலும் பத்தாது.
Rate this:
Share this comment
Cancel
jana - Coimbatore,இந்தியா
19-ஜூலை-201013:59:44 IST Report Abuse
jana கேசவ மூர்த்தி சொல்வது சரிதான். அரசு எப்படியோ போகட்டும், பொது மக்கள், குறிப்பாக நகர்புற மக்கள் இதை உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சங்கர்.ப - தேனி,இந்தியா
19-ஜூலை-201013:53:40 IST Report Abuse
சங்கர்.ப பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு நீராக கடலில் உள்ளது. மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது. மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம் நீர் பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது.உறுஞ்சு குளங்கள், தடுப்பணை கட்டுதல், வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ், நிலத்தடி நீர் அணைகள் ஆகிய முறைகள் மூலம் நிலத்தடி நீரை அதிகப்படுத்தலாம். நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும்.
Rate this:
Share this comment
Cancel
பொசாதா - சென்னை,இந்தியா
19-ஜூலை-201013:19:14 IST Report Abuse
பொசாதா தண்ணீர் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக, அரசு அலுவலர்கள், மாணவ சமுதாயத்தின் மத்தியில் ஏற்படுத்திட, தன்னார்வமிக்க அரசு அலுவலர்கள் இணைந்து ஏற்படுத்தி உள்ள அமைப்பு "மாறுதல் மேலாண்மைக்கான தகுதி வாய்ந்த மையம்". http://waterandclimatefuture.com/. இதன் வெப்சைட்-ல் தண்ணீர் சிக்கனம் குறித்து அனேக ஆலோசனைகள் உள்ளன. இது போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தால், அதிக நன்மை பயக்கும்.
Rate this:
Share this comment
Cancel
reghu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-201013:07:40 IST Report Abuse
reghu Preservation of ground water table, irrigation land -extend in the country and banning the conversion of irrigation land to any other purpose, are the vital need of the hour.Govt machinery should at least think and make the adoption of laws for sake our progeny. Save country's irrigation lands from real estate aspirants.
Rate this:
Share this comment
Cancel
19-ஜூலை-201011:30:00 IST Report Abuse
நாகன்  ஸ்ரீனிவாசன் இன்னமும் இரண்டு வருடங்களில் தண்ணீர் பற்றாக்குறை வரும் என்பது இடைக்காடு சித்தரின் ஜோதிடம்! சென்னை போன்ற நகரங்கள், கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழில் நுட்பத்தை பயன் படுத்த வேண்டும். DSI Houston Texas USA புதிய தொழில் நுட்பம் நிறைந்த தேசளினதியன், power & gas இவை மூன்றையையும் தரக்கூடிய தொழில் நுட்பத்தை தமிழர்களுக்காக கண்டுபித்துள்ளது. இது நடைமுறை சாத்தியமே.
Rate this:
Share this comment
Cancel
கேசவமூர்த்தி - Coimbatore,இந்தியா
19-ஜூலை-201011:08:46 IST Report Abuse
கேசவமூர்த்தி தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் முக்கியம். மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த அரசும் முன்வரவில்லை. வரும் காலத்தில் கடும் தண்ணீர் பிரச்னை வரக்கூடும் என்பதை மக்களும் அறியவில்லை அரசும் அறிந்ததாக தெரியவில்லை. தமிழ் மாநாட்டுக்காக செய்த செலவை, மரம் நடுதல் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த காரியங்களுக்கு செய்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை