புதிய அரசியல் அமைப்பு துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய அரசியல் அமைப்பு துவக்கம்

Added : ஜூலை 19, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் "இல்லத்தார் முன்னேற்றக் கழகம்' என்ற அரசியல் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவி., வி.பி.எம்.எம். கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு இல்லத்து பிள்ளைமார் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் பொதுச் செயலாளர் முருகதாசன், நிர்வாகி
வாசுபாலமுருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில முன்னாள் தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். இதில் "இல்லத் தார் முன்னேற்ற கழகம்' என்ற புதிய அமைப்பு  துவக்கப்பட்டது.
இவ்வமைப்பின் மாநில தலைவராக தேர்வு செய் யப்பட்ட வி.பி.எம்.எம். கல்லூரிகளின் தலைவர் வி.பி.எம்.சங்கர் கூறியதாவது: இந்த அரசியல் இயக்கம், இச்சமூகத்தினர் முன்னேற்றமடைய பாடுபடும்.
மத்திய மாநில அரசுகள், இச்சமூகத்தை சேர்ந்தவர்களை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும். இச்சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.  எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., வேட்பாளர் தேர்வில் இச்சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக் கப்படுகின்றனர்.  வரும் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தால், தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X