erode district news | பராமரிப்பின்றி வீணாகும் உப்பாறு அணைப் பூங்கா| Dinamalar

தமிழ்நாடு

பராமரிப்பின்றி வீணாகும் உப்பாறு அணைப் பூங்கா

Added : மார் 11, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தாராபுரம்: தாராபுரம் உப்பாறு அணையின் கீழ் பகுதியில் அழகிய பூங்கா, பராமரிப்பின்றி புதராக உருமாறியுள்ளது.
தாராபுரம் - பூளவாடி ரோட்டில், பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் உப்பாறு அணை அமைந்துள்ளது. அணையின் கீழ் பகுதியில், 70 ஏக்கர் பரப்பில், 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அதன் அருகில் அழகிய பூங்கா, 1968ல் அமைக்கப்பட்டது. பல்வேறு வகையான அழகிய செடிகள், பொது மக்கள் அமர சிமென்ட் பெஞ்சுகள், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், செயற்கை குளத்தில் அழகிய மலர்கள், சீரான நடைபாதை, நிழல் தரும் பல்வேறு வகை மரங்கள் இருந்தன.
உப்பாறு அணையில் தேவையான அளவு தண்ணீர் இருந்தும், பூங்காவை பராமரிக்க வேலையாட்கள் இருந்தும், புதர் மண்டிக் கிடக்கிறது. நாளடைவில், பூங்காவை போதிய பராமரிக்காமல் கைவிட்டதால், நடைபாதைகள் சிதிலமடைந்து, பல்வேறு செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. பூங்காவைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் மறைவிடங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உப்பாறு அணையில் தண்ணீர் இருப்பதால் மீன் வளத்துறை சார்பில், நான்கு லட்சம் மீன் குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். மீனவர்கள் எட்டு பரிசல்களில், 16 பேர் மீன் பிடிக்கின்றனர். உப்பாறு அணையில் பிடிக்கப்படும் ஜிலேபி மீன் நன்கு சுவையாக இருப்பதால், தாராபுரம், பல்லடம், உடுமலை, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தினமும், உப்பாறு அணைக்கு வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
தினமும், 500 கிலோ முதல் 800 கிலோ வரை மீன் பிடிக்கப்படுகிறது. மீன் வாங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு வருகின்றனர். காலை 9 மணி முதல் 10 மணி வரை மீன் விற்பனை நேரமாகும். மீதமுள்ள மீன்களை வியாபாரிகள் மூலம் பனிக்கட்டிகள் பரப்பிய பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். ஒரு கிலோ ஜிலேபி மீன் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை சுத்தம் செய்ய கிலோவுக்கு 10 ரூபாய் மீன் பிடி தொழிலாளர்களுக்கு கூலியாகும். 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்களுக்கு அணையிலிருந்தோ, ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் வசதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்யாததால், தற்போது, 400க்கும் மேற்பட்ட மரங்கள் பட்டுப் போய், மட்டைகளின்றி, தூண்களாக காட்சிப் பொருளாக நிற்கின்றன.
உப்பாறு அணையின் கீழ்பரப்பில் உள்ள தென்னை மரங்கள், பூங்கா, தேக்கு மரங்கள் அடங்கிய பகுதிகளைச் சுற்றிலும், காம்பவுண்ட் அமைத்து தனியாருக்கு குத்தகைக்கு விட்டால் பொதுப்பணித் துறைக்கு ஆண்டுதோறும் நல்ல வருமானம் கிடைப்பதோடு உப்பாறு அணை சுற்றுலா தலமாக உருமாறும் சூழ்நிலையுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர் உப்பாறு அணைக்கு, நிதி ஒதுக்கி, பராமரிப்பு செய்து தனியாருக்கு குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் விரும்புகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X