CM sends thanks giving letters to allies for support in By Polls | கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் நன்றி கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் நன்றி கடிதம்

Updated : மார் 12, 2012 | Added : மார் 11, 2012 | கருத்துகள் (7)
Advertisement
கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் நன்றி கடிதம்

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


சங்கரன்கோவில் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முத்துச்செல்வி போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ள தமிழக ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி ஆகியோருக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:வரும் 13ம் தேதி அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,விற்கு தங்களுடைய கட்சியின் ஆதரவை வழங்கி உள்ளமைக்கு, எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வி, பெருவாரியமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், தங்களுடைய பிரசாரப் பணிகள் அமைய வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அதிக ஓட்டு வாங்கினால் தங்க மோதிரங்கள் பரிசு: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வாங்கித் தரும் அ.தி.மு.க., கிளைச் செயலர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார்புரத்தில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலர் ஆறுமுகநாதன் பேசியதாவது: கடந்த தேர்தலில், இப்பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளது. இம்முறை அதிக ஓட்டுகள் கிடைக்க, நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.அதிக ஓட்டுகள் வாங்கித் தரும் கிளைச் செயலர்களுக்கு, முதல் பரிசாக ஜெ., படம் போட்ட மூன்று சவரன் தங்க மோதிரம், இரண்டாவது பரிசாக இரண்டு சவரன் மோதிரம், மூன்றாவது பரிசாக ஒரு சவரன் மோதிரம் வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய மாநில பேரவை செயலர் அன்பழகன், ""பரிசுகளை முதல்வர் ஜெ., கையால் வழங்க ஏற்பாடு செய்வேன்,'' என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-மார்-201205:27:20 IST Report Abuse
Samy Chinnathambi எல்லாத்துக்குமே "நான்" "எனது" என்று மண்ட கணத்தோடு பேசும் பாட்டி, தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகளின் நினைவு வந்து விட்டது. முக்கிய கூட்டணி கட்சிகள எல்லாம் தொரத்திவிட்ட பிறகு, அந்த நாலணா வடைக்காக ஏங்கிகிட்டு நாலு பேரை மட்டுமே வச்சிக்கிட்டு உக்காந்திருக்கிற கூட்டணி கட்சிகளுக்கு இப்போ தான் நன்றி சொல்ல நினைப்பு வந்திருக்கு. ஜெயிக்க வைக்கிறவங்களுக்கு மோதிரமா? அப்போ வாக்காளர்கள் உங்களை ஜெயிக்க வைக்க மாட்டாங்கன்னு பயமா?
Rate this:
Share this comment
Cancel
nandhakumar - london ,யுனைடெட் கிங்டம்
12-மார்-201203:37:18 IST Report Abuse
nandhakumar மோதிரம் மட்டும் தானா ???????????????????/
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
12-மார்-201202:39:57 IST Report Abuse
மதுரை விருமாண்டி "அதிக ஓட்டுகள் வாங்கித் தரும் அ.தி.மு.க., கிளைச் செயலர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படும்" என்று செய்தி இருக்கே.. அதெப்படி ஓட்டில் எந்த அதிமுக கிளைச் செயலர் வாங்கித் தந்த ஓட்டு என்று கணக்கெடுக்க வசதியா அதில் எழுதி இருப்பார்களா ?? பிறகு தங்க மோதிரம் எப்படி கொடுப்பார்கள் ?? அதிமுக திட்டமெல்லாம் இப்படித் தான் இருக்கு... அது சரி, கூட்டணிக் கட்சிகளுக்கு பரிசு ஒண்ணும் கிடையாதா ?? கட்சிக்கு ஒரு ஐந்து ஆறு ஓட்டாவது கிடைக்குமே..
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
12-மார்-201202:30:49 IST Report Abuse
Sekar Sekaran கூட்டணி கட்சி தலைவர்களை மதிப்பதில்லை என்கிற சிலரது உளறல்களுக்கு சாட்டையடியாய் அமைந்த செய்தி. பிறகட்சியினரிடம் இல்லாத உயர் குணமிது.
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
12-மார்-201201:55:22 IST Report Abuse
INDIAN கூட்டணி கட்சி தலைவர்களின் நினைப்பு வேற இருக்கா? பரவாயில்லையே தேர்தல் நேரத்திலயாவது நினைப்பு வந்ததே???
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
12-மார்-201200:35:50 IST Report Abuse
NavaMayam ஜவகர் அலியும், திண்டிவனம் ராமமூர்த்தியும் எவ்வளவு முக்கியமான தலைவர்கள், அவர்களையும் மன்மோகன் சிங் வரிசையில் கடிதம் எழுதி சிறுமை படுத்தி விட்டாரே .. ஹெலிகாப்டரில் சென்று நேரில் பூங்கொத்து கொடுத்து அல்லவா அழைப்பு விடுத்திருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
12-மார்-201200:20:20 IST Report Abuse
KAARTHI ஐயா ராமதாசுக்கு சேதி அனுப்பிட்டீங்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை