அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை: மன்மோகன் கடிதம் | அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை: மன்மோகன் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை: மன்மோகன் கடிதம்

Added : மார் 13, 2012 | கருத்துகள் (6)
Advertisement
அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை: மன்மோகன் கடிதம்

சென்னை: ""இலங்கையின் போர்க்குற்றங்களை சுதந்திரமாக விசாரிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலை'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபை மனித உரிமைக் குழுவில், அமெரிக்க தாக்கல் செய்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகனுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி இரு கடிதங்களை எழுதியிருந்தார்.


அதற்கு பதிலளித்து மன்மோகன் எழுதியுள்ள கடிதம்: இலங்கையில், 2009ல் நடந்த போருக்குப் பின், தமிழர்களுக்கு நியாயமான நலன்கள் கிடைக்கும் வகையில், அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அதே வேளையில், வீடுகளை இழந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை, அவர்களது சொந்த இடங்களில் மிக விரைவில் மறு குடியமர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழர்கள் பகுதியில் அவசர சட்டங்களை திரும்ப பெற்று, இயல்பு நிலையை கொண்டு வர வேண்டும். நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதோடு, மனித உரிமை மீறல் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும். இதற்கு, பொருளாதார மற்றும் நிதியுதவிகளையும் அளிக்க வேண்டும்.


இலங்கை தமிழர் பகுதிகளில், இயல்பு நிலை திரும்ப இந்தியா அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. இந்தியாவின் சார்பில், வீடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி, வேளாண்மை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படுகிறது. அவசர நிலை திரும்ப பெற்று, வடகிழக்கு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மறுகுடியமர்வில் நியாயமாக செயல்படுவதோடு, தமிழர்களின் குறைகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்க வேண்டும் என, இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது. போருக்கு பின், இலங்கை அரசு அமைத்துள்ள சமரசக் குழுவை இந்தியா வரவேற்கிறது.


இக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்செய்யும் என நம்புகிறோம். சமரசக்குழு பரிந்துரையின் அடிப்படையில், போரின் போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, காலக்கெடு நிர்ணயித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஐ.நா., சபை மனித உரிமைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அனைத்து தரப்புகளையும் இந்தியா தொடர்பு கொண்டு பேசி வருகிறது. இதில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படாமல், சமரசமாக தீர்வு காண இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இலங்கை தமிழர்கள் எதிர்காலத்தில், சுயமரியாதையுடன், சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோள் என கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Magudees - chennai,இந்தியா
14-மார்-201214:58:08 IST Report Abuse
Magudees தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் சரியான தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sudhakar - Mura,புருனே
14-மார்-201206:59:11 IST Report Abuse
Sudhakar மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு துறோகம் செய்யும் மத்திய அரசங்கம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-மார்-201215:45:21 IST Report Abuse
Nallavan Nallavanஆனால் காங்கிரசார் உள்ளாட்சி உறுப்பினராகவோ, மேயராகவோ, எம்.எல்.ஏ.-க்களாகவோ, எம்.பி.-க்களாகவோ தேர்ந்தெடுக்கப்படுவது தமிழகத்தில் தொடர்கிறதே?...
Rate this:
Share this comment
Cancel
செல்வன் - Kolkatta,இந்தியா
14-மார்-201201:10:54 IST Report Abuse
செல்வன் சீனாவை இந்தியகடல் ஆதிக்கத்தை ஒடுக்க முயலும் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தினை இந்தியா ஆதரிப்பிதில் தவறில்லை..இந்தியா கடல் பகுதிகளை இலங்கை சீனாவிற்கு எண்ணெய் எடுப்பதிற்கு அனுமதி அளிப்பது என்பது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகும்..இலங்கை சீனாவை காட்டி இந்தியாவுடன் விளையாடுகிறது.. இலங்கையிடம்(சீனாவிடம்) இந்தியா மண்டியிடுகிறதா???..தமிழ்நாட்டினை கருத்தில் கொள்ளாவிடினும்,இந்தியாவின் நலத்தினை புரிந்து கொள்ளுமா இந்த மத்தியரசு???...
Rate this:
Share this comment
Cancel
santhosh gopal - Vellore,இந்தியா
14-மார்-201200:52:59 IST Report Abuse
santhosh gopal போர் நடைபெற நீங்களும் எங்க பாச தலைவனும் உதவி செஞ்சீங்களே அப்போ எத்தனை கட்சிகளிடம் கலந்து ஆலோசித்தீர்கள்? நீங்க மட்டும் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாருங்க, அப்புறம் தெரியும் தமிழன் யார் என்று? நீங்க இந்த தீர்மானத்தை எதிர்த்தால், உங்களுக்கும் சரி, எங்க பாச தலைவனுக்கும் சரி இனி ஆட்சிக்கே வரமுடியாத படி செய்திடுவோம். மொத்த இலங்கையில் உள்ள தமிழர்களையும் ஈவு இறக்கம் இல்லாமல் கொன்று குவித்ததில் பெரும் பங்கு எங்க பாசதலைவனையே சேரும். அவர் மட்டும் கருணாநிதி தாத்தா நாடகம் ஆடாமல், தமிழக அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால், போர் நடைபெற்றிருக்காது. நான் லண்டன் சென்றபோது இரண்டு இலங்கை தமிழர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் சிறிது நேரம் பேசினார்கள். அவர்கள் சொன்னார்கள், கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்றார்கள். போர் நடைபெற முக்கிய காரணம் காங்கிரஸ் அரசும், திமுக அரசும் தான். இத்தாலியை சேர்ந்த இரண்டு மாலுமிகள் கேரளா மீனவர்களை கொன்றதற்காக 15 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசாங்கம் அவர்களை விட முடியாது, கொத்து கொத்தாக நம் இன மக்கள் படு கொலை செய்ததை கண்டுக்கொள்ளாமல், இரண்டு உயிரை கொன்றுள்ளார்கள் என்று கூறிவிட்டது. அப்படி என்றால் மத்திய அரசுக்கு மலயாலதானுக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழனுக்கு கிடையாது. தமிழனை எளக்காரமாக மற்ற மாநிலத்து மக்களும் சரி, மத்திய அரசும் சரி நினைக்க காரணம் கருணாநிதியும் அவரின் அரசியல் தரமும் தான். ஒரு வார்த்தை இருக்கிறது, கொரங்கு கையில் பூமாலை போன்று என்பார்கள், அது போல மத்திய அரசிடம் கண்டிப்பான போக்கை இவர் கடைபிடிக்கவில்லை, அவர் மட்டும் கம்பீரமாக 40 / 40 பயன்படுத்தி மத்திய அரசாங்கத்திற்கு shock treatment கொடுத்திருந்தால் தமிழர்களின் மீது பயம் வரும், இவர் எங்கே, இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம், மனித சங்கிலி, தந்தி போன்று நடத்தினால் மத்திய அரசு பின்னால் நம்மை பார்த்து சிரிக்காமல் என்ன செய்வார்கள்? அதனால் தான் மத்திய அரசு நம்மை மதிப்பதே இல்லை. தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று நினைத்து கொண்டுள்ளனர். இன்னும் திமுகவை தமிழர்கள் ஜீன் டினை போல குருட்டு தனமாக நம்பியிருந்தால் நம்மை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு சென்றுவிடுவார். இவர்களுக்கு தமிழர்கள் என்றால் ஒட்டு போடவும், கொடி பிடிக்கவும், தனக்கு ஆபத்து வந்தால் போராட்டத்தில் ஈடுபடவும் தான் வேண்டும். தமிழர்களை பயன்படுத்தி லட்சம் கோடிகளை குடும்ப கஜானாவில் சேர்த்தார். வெளி நாட்டில் பொங்கு தமிழ் என்ற ஒரு நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடத்தப்பட்டது. வெளி நாடு வாழ் தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள், அந்த நிகழ்ச்சிக்கு வெள்ளைக்காரன் தான் தலைமை தாங்கினான். கூட சேர்ந்து நடனமும் ஆடினான். தமிழனுக்கு ஒன்று என்றதும் அந்த அந்த தூதரகங்கள் முன்னால் தமிழர்கள் மிக பெரிய போராட்டம் நடத்தினார்கள், இங்கிலாந்த் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனை வெகுவாக ஒலித்தது. உலகம் முழுவதும் (இந்தியாவை தவிர) இலங்கையில் நடக்கும் போரை கண்டித்தும், ராஜபக்சேவை கண்டித்தும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கருணாநிதிக்கோ அந்த அக்கறை இல்லாமல் போய்விட்டதே? யாராவது சாகட்டும், நமக்கென்ன என்று போர் நடத்த உறுதுணையாக இருந்தார். குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும், இலங்கையில் அவர்களுக்கம் அதிகாரம் குறைந்திருக்கும், அதெல்லாம் விட்டு இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார், இந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்து மலேசியா மக்கள் கொதிப்படைந்தனர், அவர்கள் கருணாநிதி படத்தை வைத்து செருப்பால் அடித்தும், செருப்பு மாலை போட்டும், காரி துப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதை எல்லாம் பார்த்ததற்கு பிறகும் கருணாநிதி நடவடிக்கை எடுத்திருந்தால் கொஞ்சாமாவது மக்களை காப்பற்றியிருக்கலாம், பிறகும் மனித சங்கிலி, தந்தி, ஒன்றுக்கும் உதவாத நிருபமா ராவை அனுப்புவது போன்ற தில்லுமுல்லுகளை செய்தார். சரி போனது போகட்டும், இந்த தீர்மானத்திற்கு மட்டும் மத்திய அரசு எதிர்த்து வாக்களித்தால், உடனடியாக கருணாநிதி ஆதரவை திரும்ப பெறவேண்டும். அப்படி செய்தால் தான் இவர் செய்த தவறுகளுக்கு பிராய சித்தம், இல்லை ஏழு ஏழு ஜென்மத்திற்கும் இவர்கள் ஆட்சிக்கே வரமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
Deenathayalan Raju - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201200:41:45 IST Report Abuse
Deenathayalan Raju அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை: மன்மோகன் கடிதம் - மத்திய அரசின் கேவலமான முடிவு. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித உரிமையக்கு குரல்கொடுக்க தவறியதாக இந்த உலகம் கருதும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை