Lanka tries hard to null US resolution | அமெரிக்க தீர்மானத்தை முறியடிக்க இலங்கை பெரும் முயற்சி| Dinamalar

அமெரிக்க தீர்மானத்தை முறியடிக்க இலங்கை பெரும் முயற்சி

Added : மார் 14, 2012 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கொழும்பு: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த தனது திட்டத்தைத் தாக்கல் செய்ய, இலங்கை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், கடந்த 7ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு இதுவரை, 22 நாடுகள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், 47 நாடுகள் உறுப்பினராக உள்ள கவுன்சிலில் ஒரு தீர்மானம் ஆதரவு பெற, 26 நாடுகளின் ஆதரவு தேவை. இதில், இந்தியாவின் நிலை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதற்கிடையில், மற்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் பல்வேறு முயற்சிகளில், இலங்கை தீவிரமாக இறங்கியுள்ளது.


இந்நிலையில், அமெரிக்க தீர்மானம், வரும் 20 அல்லது 23ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்தை முறியடிக்க அல்லது ஓட்டெடுப்பு நடக்க விடாமல் தடுக்க அல்லது தீர்மானத்தின் சில பகுதிகளை திருத்தங்கள் மூலம் நீர்த்துப் போகச் செய்ய, இலங்கை முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜெனீவா நகரில் திரண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், இலங்கை நியமித்த, கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகள் எவ்விதத்தில் அமல்படுத்தப்பட உள்ளன என்பதை விளக்கும் வகையில் ஒரு திட்டத்தை, கவுன்சிலில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை தயாரிக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேநேரம், இலங்கையின் இந்த இழுத்தடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக சார்புச் செயலர் ராபர்ட் ஓ பிளேக்,"நடந்த போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவை இலங்கையின் நலனுக்கு முக்கியம். இதைச் செய்யத் தவறிய நாடுகள் மீண்டும் வன்முறைகளில் சிக்கியுள்ளன. இலங்கையும் அந்த தவறைச் செய்தால், அந்த நிலை இலங்கையில் மீண்டும் ஏற்படலாம்' என்றார். இந்நிலையில், சேனல் 4 செய்தி நிறுவனம் புதிய வீடியோ தொகுப்பு வெளியிடுவது குறித்து பேட்டியளித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட்,"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. இலங்கை தான் கூறிய உறுதிமொழிகளை அமல்படுத்த தவறியதால் தான், இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது' என்றார். கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, நார்வே வெளியிட்ட அறிக்கையில்,"மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களுக்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Raman - Chennai,இந்தியா
15-மார்-201223:40:49 IST Report Abuse
Siva Raman சோனியா, ஜெயலலிதா பெண்கள் பலி வாங்கும் எண்ணம் ஜாஸ்தி.என் மக்களை அழிச்ச காங்கிரஸ், இலங்கை அழியணும். அப்ப தான் தமிழன் தலை நிமிந்து நிப்பான். அமெரிக்காவ பாராட்டலாம். சேனல் 4 மாதிரி தினமலர் இருக்க முடியாட்டாலும் பரவாயில்லை....
Rate this:
Share this comment
Cancel
புலம் பெயர் தமிழர் - Paris,பிரான்ஸ்
15-மார்-201222:48:40 IST Report Abuse
புலம் பெயர் தமிழர் 1970 களின் கடைசில் தொடங்கிய இன பிரச்சினை 2008 இல் நடந்த ஒரு கொடிய மானுடம் இல்லாத சண்டை வரை தொடந்திருக்கிறது. இந்த 40 ஆண்டு காலமும் இலங்கை தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆயுனும் சிங்கள அரசு இன்றுவரை தமிழர்களை திறந்தவெளி சிறைசாலைகளில் அடிமைகளாக அவர்களின் பிறப்பு உரிமையாகிய சுதந்திரம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை மறுத்தே வருகிறது. தனக்கு சாதகமாக தங்களை சிங்களம் என்ற ஒரே குடியாகவும் பெரும் பான்மையாகவும் காட்டுகின்றது, தமிழர்களை இலங்கை தமிழர், இந்திய வம்சாவளி தமிழர், மலையக தமிழர், முசிலீம் தமிழ் பேசும் சமூகம் என்று பல கூறுகளாக பிரித்து எண்ணிகையில் சிறுபான்மை என்று சொல்லி அவர்களின் எல்லா உரிமைகளையும் மறுத்து நிற்கிறது. இலங்கையில் இன்றும் ஒரு ஜன நாயக போராட்டம் சாத்தியம் இல்லாத நிலைதான் இருக்கிறது. எனவே தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு காரணமான இந்த போரட்டதின் இறுதி நிகழ்வின் விசாரனை உடன் அவர்களின் அரசியல் விடுதலைக்கும் அனைவரும் இணைந்து குரல் கொடுத்தால் எங்கல் கனவுகள் நிஜம் பெற உதவும். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Swami Nathan - Riyadh,சவுதி அரேபியா
15-மார்-201222:40:13 IST Report Abuse
Swami Nathan srilakan,s government is threating india to give military base for chinese government.the american's government wants military base in srilanka to control asia countries including india, china. everything is going on political basis.singalies are very criminal.they put the indian government in difficult situation to decide about the resolutions.
Rate this:
Share this comment
Cancel
Kumaresan Natarajan - Chennai,இந்தியா
15-மார்-201221:23:38 IST Report Abuse
Kumaresan Natarajan என்ன சொல்ல... ஒருபக்கம் துரோகி கருணாநிதி. மறுபக்கம் மாபாவி ராஜபக்ஸே. இவர்களுக்கு துணைபோகும் இந்திய அரசு. இனி இந்தியன் என நான் சொல்ல மாட்டேன். நாம் தமிழர்களாக இனியாவது வாழ்வோம் ........... தயவு செய்து இலங்கையில் கொலைகளம் காணொளியை பாருங்கள். அப்போது உண்மை தெரியும். இந்த மாபாவிகளுக்கு இதயமே இல்லையென்று...........நம் இனத்தை நம் சொந்தங்களை சீரழித்த சிங்கள மிருகங்களை அதற்கு துணை போன காந்தி தேசமே இதற்கு ஒரு நாள் பதில் சொல்லியே தீரவேண்டும் நாட்கள் தூரம் இல்லை ...........
Rate this:
Share this comment
Cancel
jack - rome,எஸ்டோனியா
15-மார்-201221:19:10 IST Report Abuse
jack இந்த யுத்தத்தை பின்னணியில் இருந்து இயக்கியதே இந்தியா தான். பிறகு எப்படி தீர்மானத்தை ஆதரிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Henry baskar - ipoh,மலேஷியா
15-மார்-201220:29:46 IST Report Abuse
Henry baskar ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களை அந்நியன் கொல்கிறான் , தமிழ்நாட்டிலுள்ள தமிழனை அரசியல் கொல்கிறது. ஒரு அமெரிக்கனுக்கு அநியாயம் என்றால் ஒவ்வொரு அமெரிக்கனும் துள்ளி எழுவான் , எவனுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என தமிழினம் மட்டுந்தான் உலகில் இருக்கும் . சினிமா முதல் சிறிய வியாபாரம் வரை அனைத்திலும் நமக்குள் பிரிவினையை தூண்டும் நிகழ்சிகள் தான் உண்டு. ஏழைகளிடம் பணம் பிடுங்கும் போலிஸ் முதல் அரசாங்கள் அலுவலகம் வரை. அதை எதிர்க்க துணிவிலாத மக்கள் . என்ன கொடுமையான நிலை , இவை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு . நம்மினம் நம்மையே கேவலமாக நினைத்துதான் நடத்துகிறார்கள். சிந்திப்பார்களா ????
Rate this:
Share this comment
Cancel
thamizhan121 - Chennai,இந்தியா
15-மார்-201220:14:51 IST Report Abuse
thamizhan121 சில ஆண்டுகள் முன் வரை நான் ஒரு காங்கிரஸ் ஆதரவாளனாக தான் இருந்தேன். ஆனால் தமிழர்களின் உணர்வுக்கு சிறிதும் மரியாதை கொடுக்காமல் இது வரை இருந்ததும் இல்லாமல் இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமலும் இருந்தால் இனி ஒரு நாளும் இந்த காங்கிரசுக்கு வாக்களிக்க போவதில்லை. வேறு எந்த கட்சி வந்தாலும் வரட்டும். சோனியா தலைமையிலான காங்கிரசுக்கு புலிகள் மேல் தானே வெறுப்பு( ராஜீவ் கொலை காரணத்தால் ). மற்ற சராசரி ஈழத்தமிழர்கள் என்ன கேடு செய்தார்கள் இவர்களுக்கு. இப்படி கல் நெஞ்சத்தோடு நடந்து கொண்டால் காங்கிரஸ் ஒழியும் நாள் வெகு சீக்கிரம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
Gowthaman Velauytham - chennai,இந்தியா
15-மார்-201219:40:38 IST Report Abuse
Gowthaman Velauytham மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை என்று தமிழர்கள் படுகொலைக்கு வக்காலத்து வாங்கினான் இன துரோகி கருணாநிதி. இலங்கையை நொறுக்கி அள்ள அமெரிக்கா தீவிரம்- 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது - ஒரு தமிழனாக நான் இதை வரவேற்கிறேன். இந்திய அரசே தமிழனை ஒதுக்காதே..
Rate this:
Share this comment
Cancel
Vijai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மார்-201216:43:44 IST Report Abuse
Vijai எதுக்கும் உதவாத விசயகளுக்கு கருத்துக்கள் சொல்லும் கனவான்கள் எங்கே போனார்கள் ..............இன ஒற்றுமை வேண்டாம் முதலில் மனிதாபிமான இருந்தால் இதை பற்றி கருத்துக்கள் சொல்ல வேண்டும் எங்கேயோ வதைக்கப்படும் மிருகங்களுக்க குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் சிங்கள மிருங்கங்கள் செய்த கொடுமைகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை கண்டிப்பாக இதை ஆதரிக்காதவர்கள் மனிதர்களே கிடையாது. இதனை உரக்க சொல்லுவோம் காங்கிரஸ் இருக்கும்வரை கண்டிப்பாக இந்திய வல்லரசு ஆகவே முடியாது.............
Rate this:
Share this comment
Cancel
jeyam - Srivilliputtur,இந்தியா
15-மார்-201216:08:38 IST Report Abuse
jeyam தமிழ்நாட்டில் இருந்து சென்று கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்காக 22 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக மனித உரிமை மீறலுக்காக குரல் கொடுக்க, ஆனால் இந்தியா அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பது சந்தேகமாம். என்னே ஒரு கேவலம் தமிழ்நாடு இந்தியாவில் இல்லையோ? ஆனாலும் நம்மவர்கள் செய்த தவறு,நாட்டின் பிரதமரை கொன்றதில் உடந்தையாக செயல்பட்ட மூன்று பேருக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்தி தூக்கை போடவிடாமல் செய்தது
Rate this:
Share this comment
Alagu Muthu - Tutico,இந்தியா
15-மார்-201220:27:23 IST Report Abuse
Alagu Muthuஇந்தியா தலை இல்லாத நாடு ஆகவே தமிழ்நாடு தனிப்பெரும் தலைவியின் தலைமை ஏற்று தனியாக இயங்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை