கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார் வைகோ | கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார் வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார் வைகோ

Updated : மார் 18, 2012 | Added : மார் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க,. பொதுசெயலர் வைகோ தனது ஓட்டை பதிவு செய்தார். இங்குள்ள ஓட்டுச்சாவடி எண் - 120 க்கு காலை 9 மணிக்கு வந்தார். இவருடன் மகன் துரைவையாபுரி, தம்பி ரவிச்சந்திரன், மருமகன் ஜெகதீசன், மற்றும் உறவினர்கள், கட்சி தொண்டர்களுடன் வந்திருந்தார். வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தார். ஓட்டளிக்கும் முன்னதாக நிருபர்களிடம் பேசிய வைகோ; ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் எனது தம்பி ரவிச்சந்திரன் போட்டியிட்டார். அந்நேரத்தில் ராஜிவ் கொலையில் தொடர்பான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் வழக்கு தொடர்பாக நான் டில்லிக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே அப்போது நான் ஓட்டளிக்க முடியவில்லை. இன்று ஊழற்ற ஆட்சிக்கும், ஜனநாயகம் மலர்ந்திட, விடியலை நோக்கி நான் ஓட்டளிக்கிறேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை