வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு எதிராகவும் "ரெட் கார்னர் நோட்டீஸ்' : மனைவியை ஏமாற்றியதால் அதிரடி| Dinamalar

வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு எதிராகவும் "ரெட் கார்னர் நோட்டீஸ்' : மனைவியை ஏமாற்றியதால் அதிரடி

Added : ஜூலை 19, 2010 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.


போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.


சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - India,இந்தியா
20-ஜூலை-201015:18:02 IST Report Abuse
Bala ஆண்கள் கூட பெண்களால் ஏமாற்ர படுகின்றனர், அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா? உதரணமாக ஒரு மிகப் பெரிய நடிகரே திருமண விஷயத்தில் எமற்றபட்டுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
மாதவன் - chennai,இந்தியா
20-ஜூலை-201011:37:04 IST Report Abuse
மாதவன் சில பேர் மனைவியும் மற்றும் சொந்தங்களால் படுத்தும் கொடுமை தாங்காமல் வெளி நாட்டுக்கு ஓடி இருப்பார்கள் !!!
Rate this:
Share this comment
Cancel
B.Saravanan - Dharmapuri,இந்தியா
20-ஜூலை-201009:13:06 IST Report Abuse
B.Saravanan good move by goverment.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை