பொள்ளாச்சி : ""இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்த படியாக வறட்சியான மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது,'' என, உலக தண்ணீர் தினத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கநாதன் கூறினார்.உலக தண்ணீர் தினத்தையொட்டி பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் மாற்றத்திற்கான சிறப்பு தகுதி மையம் சார்பில், "தண்ணீர் சேமிப்பதற்கான எண்ணற்ற வழிமுறைகள்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கநாதன் பேசியதாவது:நீர்வளத்தை பெருக்கவும், இருக்கும் நீரை சிக்கனமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மழை நீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்த படியாக (இரண்டாவது இடத்தில்) வறட்சியான மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமுள்ளதால் மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். இயற்கை வளத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுசெல்ல வேண்டும்.
இவ்வாறு, தலைமை பொறியாளர் பேசினார்.இதையடுத்து, கஞ்சம்பட்டி கிராமத்தில், "தண்ணீர் சேமிப்பும், தண்ணீர் பட்ஜெட்டும்' என்ற தலைப்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் லீலா வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம் பேசுகையில், ""மழை காலத்தில் அணைகளுக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. பாசனத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதை கணக்கிட்டு விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயத்தில் அதிக மகசூல் பெறும் பாசன தொழில்நுட்ப முறையை கையாள வேண்டும்'' என்றார்.செயற்பொறியாளர் செல்வராஜ், கஞ்சம்பட்டி கால்நடை மருத்துவர் உமாகாந்தன் பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.