நரசிங்பூர் :பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வகுப்பறையில் இரு மாணவியரின் ஆடைகளை அவிழ்த்து, அவர்கள் காப்பியடிக்க "பிட்' வைத்துள்ளனரா என, பரிசோதித்த இரு ஆசிரியைகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் நர்சிங்பூர் அருகே பாரபதா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு கணிதத் தேர்வு கடந்த 15ம் தேதி நடந்தது. தேர்வின் போது, வகுப்பறையில் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். அப்போது தேர்வெழுதிய இரு மாணவியர் "பிட்' அடிப்பதாக, அங்கு தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய இரு ஆசிரியைகளுக்கு சந்தேகம் வந்தது.உடனே அவர்கள், இரு மாணவியரின் ஆடைகளை அவிழ்த்து, "பிட்' வைத்துள்ளனரா என, சோதித்துள்ளனர். மாணவர்கள் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. ஆனால், அந்த மாணவியரிடம் துண்டு காகிதங்களோ, வேறு ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியர் உடனடியாக புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.என்றாலும், 20ம் தேதி நடந்த சமூக அறிவியல் தேர்வின்போது, மாணவர்கள் அவ்விரு மாணவியரையும் கிண்டல் செய்தனர். இதனால், அவமானமும், ஆத்திரமும் அடைந்த அம்மாணவியர், கணிதத் தேர்தவின் போது, மாணவர்கள் முன்னிலையில் அவமானப்பட நேரிட்டது குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, அந்த மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெகுண்டெழுந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வட்டாரக் கல்வி அதிகாரியிடம் புகார் செய்தனர். அந்தப் புகாரையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரீதி சர்மா மற்றும் ரேஷ்மா சிமையா ஆகியோரிடம் சிச்சிலி வட்டாரக் கல்வி அலுவலர் பி.பி.கவுரவ் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தில் ஆசிரியைகள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நரசிங்பூர் துணை கலெக்டர் பி.என்.யாதவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.