சென்னை: நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத்துவங்கினால், தமிழகம் தற்போது சந்தித்து வரும் கடுமையான மின்வெட்டிலிருந்து தப்பிக்க இயலும். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே நாட்டின் நலன்கருதி, குறிப்பாக, தமிழகத்தின் நலன் கருதி போராட்டக்காரர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.