வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெறும்: கிருஷ்ணசாமி ஆரூடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெறும்: கிருஷ்ணசாமி ஆரூடம்

Added : ஜூலை 20, 2010 | கருத்துகள் (6)

சென்னை :""மெகா கூட்டணி அமைத்து, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்,'' என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் கிருஷ்ணசாமி நேற்று மும் சந்தித்து பேசினார். சென்னையில்  காலை நிருபர்கள் சந்திப்பில் கிருஷ்ணசாமி கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு எங்கள் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. இது, தேவேந்திரகுல வேளாளர் இனத்தவருக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம்.பிரிந்து கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்றிணைக்க முயல்வேன். தி.மு.க., அரசு, இலவச திட்டங்களை அறிவித்தாலும் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை; நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறியது; வழங்கவில்லை.இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தமிழகத்தில் அரசியல் மாற்றம் அவசியம். அது, வரும் சட்டசபை தேர்தலில் நடக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X