Advertisement
டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012,05:27 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 28,2012,05:43 IST

புதுடில்லி: கோவா மாநிலத்தை பின்பற்றி டில்லி மாநிலத்திலும் வாட் வரியை குறைத்ததன் காரணமாக லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமானதாகும். ‌




கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பதவியேற்ற மனோகர் பாரிக்கர் பெட்ரோல் மீதான வாட் வரியை ரத்து செய்தார். இதனால் 65 ரூபாய் வரையில் விற்று வந்த பெட்ரோலின் விலை 55 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இ‌ந்த உத்தரவு வரும் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் மாநிலங்கள் தங்களின் வருவாயை பெருக்கி கொள்வதற்காக வாட் வரியை விதிக்கிறது என்றார்.




அதே வேளையில் பாண்டிச்சேரியில் 15 சதவீத அளவிற்கும் ஆந்தி‌ராவில் 33 சதவீத அளவிற்கும் வரியை விதி்க்கிறது. மத்திய அரசு எந்த வித வரியையும் விதிக்காமல் பெட்‌ரோல் லிட்டர் ஒன்றிற்கு 39-ம் டீசல் 33.51-க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.14.12க்கும் விற்பனை செய்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை விதிப்பதன் மூலம் ரூபாய் 26.55 விலை உயர்வதால் விலை அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.




இந்நிலையி்ல் பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில் மாநிலங்கள் வரி விதிப்பதன் மூலம் சுமார் ரூ.1.6லட்சம் ‌‌கோடி வருவாய் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
tamilaa thamila - chennai,இந்தியா
29-மார்-201200:08:06 IST Report Abuse
tamilaa thamila டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது என்று எழுதினால் குறைந்து விடுவீர்களோ? கோவாவை மட்டும் தனது ஆட்சி என்பதால் புகழ்வது என்னா பத்திரிகை தர்மமோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K Sanckar - Bengaluru ,இந்தியா
28-மார்-201217:45:18 IST Report Abuse
K Sanckar மத்திய அரசு மாநிலங்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான நிதியை கொடுத்தால் மாநிலங்கள் பெட்ரோல் வரியை குறைத்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சி ஆளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி விஷயங்களில் பாரபட்சம் காட்டுகிறது. பா ஜ கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிரந்தரமாக உள்ளது. எனவேதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மத்திய அரசின் நிதியை எதிர்பார்ப்பதை அறவே நிறுத்தி விட்டார். ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே இந்த குற்ற சாட்டை வைத்துள்ளார். எனவே தான் பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்றும் சொல்கிறார். மமதாவும் மேற்கு வங்கத்திற்கு அவர் கேட்கும் நிதியை பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சராக இருந்தும் தரப்படுவதில்லை என்று புலம்புகிறார். எல்லாவற்றிற்கும் மத்திய அரசுதான் காரணம். இந்த நிலை மாறினால் பெட்ரோல்விலை மாநிலங்களில் குறைய வாய்ப்பு உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RoshR - chennai,இந்தியா
28-மார்-201213:29:55 IST Report Abuse
RoshR நம்ம தமிழ் நாட்டுல பெட்ரோல் விலை குறையுமா? எல்லாத்துக்கும் கமெண்ட்ஸ் எழுதறவங்க ஏன் இந்த நியூஸ் க்கு கமெண்ட்ஸ் எழுதலை? பெட்ரோல் விலை ரொம்ப கம்மியா இருக்கா இந்த ஊர்ல?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.