சிவகங்கை :சிவகங்கை வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சிவகங்கை வாரச்சந்தையில் மலைக்காய்கறிகள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளன.
சின்ன வெங்காயம் (கிலோ) ரூ.10, பெரிய வெங்காயம்- 15, தக்காளி ரூ.25, பெங்களுரூ தக்காளி 20க்கு விற்றன. பீட்ரூட் ரூ.20, வெண்டை 20, முள்ளங்கி - 14, கத்தரி - 40, மாரநாடு கத்தரி 20, முருங்கை (ஒன்று) 5.
முட்டை கோஸ்- 12, காலிபிளவர் பூ- 10, சேனை- 20, பாகற்காய்- 20, கருணை- 20, உருளை - 20க்கு விற்றன.
வரத்து குறைவு: பட்டர், முருங்கை பீன்ஸ், பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ் வரத்து குறைவால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இந்த நான்கு காய்களின் விலையும் தலா கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்றன.
கோடைவெயில் உஷ்ணத்தை தணிக்க சந்தைக்கு வரும் மக்கள் அதிகளவில் வெள்ளை, பச்சை திராட்சை ரகங்களை விரும்பி வாங்கி சென்றனர். இதன் வரத்து சந்தையில் அதிகளவில் காணப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.