Advertisement
பாக்., பிரதமர் மகன் மீது ரூ. 700 கோடி ஊழல் புகார்: வழக்கை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2012,23:48 IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள மருந்து கம்பெனிகளுக்கு, 700 கோடி ரூபாய் அளவிலான மருந்தை முறைக்கேடாக ஒதுக்கியது தொடர்பாக, பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் மீது, புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அதிபர் சர்தாரி மீதான ஊழல் புகாரை விசாரிக்க மறுப்பதால், அவர் மீது கோர்ட் அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டால், கிலானி பிரதமர் பதவியை இழக்க நேரிடும். அப்போது அவரது இளைய மகன் அலி மூசாவை புதிய பிரதமராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்தானில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மூசா, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, பாகிஸ்தானிய போதை தடுப்பு படை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. "ஆஸ்துமாவுக்கு கொடுக்கப்படும் "எபிடிரின்' என்ற மருந்து 500 கிலோ அளவுக்குத் தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை மீறி, முல்தானில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள எபிடிரின், 9,000 கிலோ அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் சுகாதார அமைச்சகத்தை விசாரிக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கை தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் போதை தடுப்பு பிரிவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். "என்ன நிர்பந்தம் காரணமாக இந்த வழக்கை வாபஸ் பெறுகிறீர்கள்?' என, நீதிபதி கேட்டார். "அலிமூசாவின் செயலர் தாகிர் அலி ஷா என்பவர் எங்களுக்கு போன் செய்து, எபிடிரின் ஒதுக்கீட்டு வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம், என நிர்ப்பந்தப்படுத்தினார்' என்றார்.


இது குறித்து போதை தடுப்பு பிரிவின் தலைவர் பாகிம் சவுத்ரி குறிப்பிடுகையில், " இந்த வழக்கில் முக்கிய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இது தொடர்பான விசாரணையை அவர்கள் விரும்பவில்லை' என்றார். போதை தடுப்பு படை, மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறியதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களை ஒப்படைக்கும்படியும், இரண்டு மருந்து கம்பெனிகளுடன் அலி மூசாவுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விளக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை கோர்ட் அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்ததில் ஊழல் செய்ததாக, கிலானியின் மூத்த மகன் அப்துல் காதிர் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.