Advertisement
நாட்டின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள்: 20ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012,23:29 IST

பெங்களூரு:முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், வரும் 20ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால், "ரிசாட் -1' என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.


இது, இந்தியாவின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் என்ற பெருமையுடையது. இந்த செயற்கைக்கோள், இரவு, பகல், மேகங்கள் சூழ்ந்த வானிலை என, எந்த ஒரு சூழ்நிலையிலும், விண்ணிலிருந்து, பூமியைத் தெளிவாகப் புகைப்படங்கள் எடுக்கும் திறனுடையது.ஏற்கனவே, இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஏப்ரல் 20ம் தேதியில், ஏற்கனவே சில செயற்கைக்கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருப்பதால், அதே தேதியில் இந்த செயற்கைக்கோளையும் விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது."ரிசாட்-2' என்ற செயற்கைக்கோள் இஸ்ரேலிடமிருந்து 11 கோடி டாலருக்கு வாங்கப்பட்டு, அது 2009ம் ஆண்டு ஏப்ரல் 20ல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல், "ரிசோர்சாட்-2' என்ற செயற்கைக்கோளும், கடந்த ஆண்டு ஏப்ரல் 20ல் விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதால், ஏப்ரல் 20ம் தேதி, இஸ்ரோவிற்கு ராசியான நாளாகக் கருதப்படுகிறது.


எனவே, வரும் 20ம் தேதி, "ரிசாட்-1' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படலாம். மொத்தம் 1,850 கிலோ எடை கொண்ட, இந்த செயற்கைக்கோள், "பி.எஸ்.எல்.வி-சி-19' ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது."ரிசாட்-1' செயற்கைக்கோள், விவசாயம், நீர்வள மேலாண்மை உட்பட பல விதமான பணிகளைக் கண்காணிக்க உதவிகரமாக இருக்கும். "ரிசாட்-2' போல, இது ராணுவம் தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படாது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (16)
Karunanithy - Chennai,இந்தியா
03-ஏப்-201208:54:57 IST Report Abuse
Karunanithy அன்றாட வாழ்க்கைல இந்த செயற்கைக்கோள் மக்களுக்கு எப்டி பயன்படும்னு கொஞ்சம் விலகி எழுதிருக்கலாம். எவ்ளோ செலவு மற்றும் எவ்ளோ பெரிய சாதனைன்னு சொல்றது முக்கி‌யம் இல்லை, எப்படி இது மக்களுக்கு உபயோகமா இருக்குனுதான் பார்க்கணும். கடந்த வருடம் சில முதல்வர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர்ஸ் ஆக்ஸிடென்ட் ஆச்சு, இந்த மாதிரியான செயற்கைகோள் வச்சு கண்டுபுடிசாங்களா????? இல்லையே. வருடத்திற்கு ஒருமுறை, நமது செயற்கைக்கோள் பயன்படுத்தி எனலாம் மக்கள்கு சேவை செய்தாங்க அப்டின்னு ஒரு ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும். இன்சாட் செயற்கைகோள் தவித்த வேற எதுவும் மக்கள்கு பயன்படுற மாதிரி எனக்கு தெரியலை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nimsa - Chennai,இந்தியா
03-ஏப்-201206:41:59 IST Report Abuse
Nimsa ஊழல் செய்பவர்களை படம் எடுக்குமா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shankar - chennai,இந்தியா
02-ஏப்-201215:10:17 IST Report Abuse
shankar எல்லாம் சரிதான் கஷ்டப்பட்டு விஞ்ஞானிகள் செலுத்தற இந்த செயற்கோளை உடம்பு நோகாம இந்த அரசியல் வாதிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்று ஊழல் பண்ணுவாங்க. பாவம் விஞ்ஞானிகள் வாழ்க அரசியல்வாதிகள். வெங்கி சென்னை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201214:09:25 IST Report Abuse
Kankatharan  நாட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் 40 கோடி மக்கள் அல்லாட்டம், குடிநீரில்லாமல் ஒருபக்கம் தவிப்பு. மின்சாரம் கண்டுபிடிக்க வழியில்லை, சில மானிலங்கள் இன்னும் மின்சாரத்தை அறியாமல் இருக்கின்றன. ஊழலுக்கு உலகப்பரிசு யாருக்கு குடுக்கலாம் என போட்டி நிலவுகிறது ஆறுகள் வாய்க்கால்கள் அனைத்தும் அடைபட்டுவிட்டன அதை திறப்பதற்கு பூமியில் இருக்கும் அரசுக்கு திராணி இல்லை. இந்த இலட்சணத்தில் விண்ணிலிருந்து, பூமியைத் புகைப்படங்கள் எடுக்கும் செயற்கை கோள் தேவைதானா? இத்திட்டத்திலும் எத்தனை ஆயிரம் கோடி உழலோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Suthahar Palanisamy - karur,இந்தியா
02-ஏப்-201212:03:58 IST Report Abuse
Suthahar Palanisamy வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயபுள்ள - சிங்கை,சிங்கப்பூர்
02-ஏப்-201211:48:30 IST Report Abuse
பயபுள்ள கனவு கண்ட இந்தியனுக்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sagayanathan - Muscat,ஓமன்
02-ஏப்-201210:20:20 IST Report Abuse
sagayanathan விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.. எதுல பார்த்தாலும் இத்தனை கோடி ஊழல் என்று தணிக்கை துறை அறிக்கை தருகிறார்கள்..கொஞ்சம் பார்த்து ஏவுங்க ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Shenbagarajan paulraj - Surat,இந்தியா
02-ஏப்-201210:17:27 IST Report Abuse
Shenbagarajan paulraj விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்... ஒரு இந்தியனாக இந்த செய்தியை படிக்கும்பொழுது பெருமையாக உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Praba.. - Panruti.  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-201208:26:53 IST Report Abuse
Praba.. Im proud of Indian. all the best for ur sucess...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
02-ஏப்-201206:58:50 IST Report Abuse
SENTHIL KUMAR ஒரு இந்தியனாக இந்த செய்தியை படிக்கும்பொழுது பெருமையாக உள்ளது. (இந்த நியூமரலாஷி அறிவுக் களஞ்சியமாம் இஸ்ரோவையும் விடவில்லை)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.