Advertisement
தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை : ரூ.50 லட்சம் வாழை நாசம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012,23:40 IST

தேவாரம் : தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த, "திடீர்' கோடை மழைக்கு, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 15 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தேவாரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரம், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோம்பை புதுக்குளம் கண்மாய் பாசனப்பகுதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயி சின்னபூமாலை கூறியதாவது:
புதுக்குளம் கண்மாய் புலத்தில் பெரும்பாலான விவசாயிகள் வாழை, தென்னை பயிரிட்டுள்ளோம். ஓராண்டாக வளர்த்த வாழைகள் அறுவடைக்கு தயாரான நிலையில் சேதமடைந்துள்ளன. 300 ரூபாய்க்கு விற்க வேண்டிய தார்களை தற்போது 20 ரூபாய்க்கும் குறைவாக மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள். விவசாயத்துறையினர் 15 ஆயிரம் வாழை சேதமடைந்துள்ளதாக கணக்கிட்டுள்ளனர். ரூ. 50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் நாசமடைந்துள்ளன, என்றார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.