புதுடில்லி: நாடு முழுவதும், 16 ஆயிரத்து 800 வி.ஐ.பி.,க்களுக்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாவும், இது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, இரண்டு மடங்கு அதிகம் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2010 நிலவரப்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, சம்பந்தபட்ட மாநில போலீசார், பாதுகாப்பு அளிக்கின்றனர். இந்த வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்புப் பணியில், 50 ஆயிரத்து 59 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்..,க்கள் உள்ளிட்டோர், இந்த வி.ஐ.பி.,க்களின் பட்டியலில் அடக்கம். வழக்கமாக, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, 28 ஆயிரத்து 298 போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட, இரண்டு மடங்கு அதிக போலீசார், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ""மாநிலங்களில் போலீசாரின் எண்ணிக்கை, குறிப்பிட்ட அளவில் தான் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டியுள்ளது. வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், மறு ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்'' என்றார். கடந்தாண்டு ஜனவரியில், போலீஸ் ஆராய்ச்சி புலனாய்வுத் துறை தயார் செய்த அறிக்கையில், "ஒரு லட்சம் மக்களுக்கு, 131 போலீசார் என்ற விகிதாச்சாரம் உள்ளது. ஆனால், ஒரு லட்சம் பேருக்கு, 173 போலீசார் என்ற விகிதாச்சாரம் என்பது தான், அனுமதிக்கப்பட்ட அளவு. இதை கணக்கிடும்போது, பொதுமக்களுக்கான பாதுகாப்புக்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விட, குறைவான போலீசார் தான், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நமது நாட்டில் குடியிருக்க இடமின்றி, பிளாட்பாரங்களில் பல்லாயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கு ஐம்பதாயிரம் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை. முக்கிய பிரமுகர்கள் யார் என்பதற்கு உரிய வரையறை உருவாக்குதல் அவசியம் என்பதுடன், முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும்.
vip கல் சுய பாதுகாப்பை ஒழுங்கு படுத்தி கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்து அறுபத்தினாலு ஆண்டுகளில் 16800 vip களுக்கு 50000 போலீஸ் பாதுகாப்புடன் நாட்டில் வளம் வருவது, நம் நாட்டின் சட்டம் ஒழுங்கு, தனி மனித சுதத்திரம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது. அன்னியர்கள் நம்மை ஆண்ட பொது கூட இந்த நிலை இல்லை. vip களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் படை நிர்வாக செலவுக்கு அந்தாந்த vip இடமிருந்து அந்த செலவு தொகையை அரசாங்கம் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும்...
தீவிரவாதிகள் நிறைந்துள்ள நாட்டில் வெறும் ஐம்பது ஆயிரம் போலிஸ் மட்டுமே வியிபிகளுக்கு இருப்பது மிக கேவலம். அவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ரெண்டு லட்சம் போலிஸ் போட்டு பாதுகாப்பு கொடுத்தால் நாட்டின் தலைவர்களை காப்பாற்றலாம். நாட்டின் தலைவர்களை காப்பாற்றினால், நாட்டை காப்பாற்றுவதற்கு சமம். அவர்கள்தான் இந்த நாட்டின் தலைவிதிகளை நிர்ணயிக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு நாட்டின் கடமை. தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில், மக்களுக்கு எப்படி இருக்கும்? சரத் பவாரை ஒரு பஞ்சாபி அடித்து விட்டான். பல தலைவர்களின் முகத்தில் செருப்பு வீசப்பட்டுள்ளது. இதெல்லாம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதன் அறிகுறி.
பொதுமக்களுக்கு பாதுகாப்பிற்கு காவலர்கள் கம்மி. அதேநேரம் விஐபி., களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது? விஐபி.,க்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்பது வெளிப்படை. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் நாணயமுள்ளவர்களாக இருப்போம் என்று சத்தியம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு, பொதுமக்களுக்கும் நிம்மதி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.