புற்றீசல் போல் கிளம்பும் "சம்மர் கேம்ப்' மையங்கள்: பணத்தை குறிவைப்பதால் பலன் கிடைக்குமா? | புற்றீசல் போல் கிளம்பும் "சம்மர் கேம்ப்' மையங்கள்: பணத்தை குறிவைப்பதால் பலன் கிடைக்குமா?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சேலம்:
நகர்ப்புறங்களில்
புற்றீசல் போல,
"சம்மர் கேம்ப்' நடத்தும்
பயிற்சி மையங்கள்
தோன்றியுள்ளன.
இவற்றில் பலவற்றில்,
உரிய தரம் இல்லாததால்,
பொதுமக்கள் ஏமாற்றம்
அடையவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அனைத்து
பள்ளிகளிலும் பொதுத்
தேர்வுகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாளில் இவை முடிவடைந்து, கோடை விடுமுறை துவங்க உள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகளில், ஏப்ரல் 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டு மாத விடுமுறையில், குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிக்க வேண்டுமே என்ற எண்ணம் பல பெற்றோருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு மாத விடுமுறையை உபயோகமாக கழிக்கும் படி, சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பவும் பெரும்பாலானோர் தயாராகிவிட்டனர். இதனால் சில ஆண்டுகளாக கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பயிற்சி மையங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடப்பாண்டு, தற்போது ஏராளமான விளம்பரங்களுடன், நீச்சல், ஓவியப்பயிற்சி,

ஆங்கில பயிற்சி, ஜிம்னாஸ்டிக், கராத்தே, யோகா, பாட்டுபயிற்சி, இசை பயிற்சி, நடன பயிற்சி என, பல்வேறு பயிற்சிகளையும் வழங்கும் சிறப்பு மையங்கள் உருவெடுத்துள்ளன. சில தனியார் பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு தனியாக, 500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தினசரி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை பயிற்சியளிக்கும் இம்மையங்களில், வழங்கப்படும் பயிற்சிகள் உண்மையில், பலன் அளிக்கக்கூடியதா என பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக நீச்சல் அல்லது ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பயிற்சிகளில், அடிப்படை அம்சங்களை மட்டுமே இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ள முடியும். அதன் பின் கல்வியாண்டு துவங்கிய பின், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவதால், இந்த இரண்டு

Advertisement

மாதத்தில் பயின்ற விசயங்களை மாணவ, மாணவியர் எளிதில் மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்து பயிற்சிகளையும், தங்களது குழந்தை கற்றுக்கொள்ள வேண்டும் என, பெற்றோர் நினைப்பதைவிட, குழந்தையின் ஆர்வத்தை புரிந்து, அதில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில், பிராக்டிஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உபயோகமாக இருக்கும்.
நீச்சல் பயிற்சியை தொடர்ந்து வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நீச்சலில் சாம்பியனாக உருவெடுக்கவும் முடியும். ஓவியத்தில் ஆர்வம் இருப்பின் தொடர்ந்து பயிற்சியும்,முயற்சியும் நிச்சயம் ஒரு கலைஞனாக உருவெடுக்க வைக்கும். உரிய நிபுணர்கள் இன்றி, தற்காலிகமாக ஒரு மாதத்துக்கு மட்டும் பயிற்சியளிக்கும், "திடீர்' மையங்களில் சேர்ப்பது குறித்து பெற்றோர் யோசிக்க வேண்டும். ஒரு மாதத்தில் காணாமல் போய்விடும் இம்மையங்களில், தொடர்ந்து பயிற்சி பெறவும் வழியிருக்காது. தரமான நிபுணர்களும் இங்கு இருப்பது சந்தேகமே. எனவே, 15 நாள் அல்லது ஒரு மாத பயிற்சி என, பணத்தை வீணாக்காமல், தொடர்ந்து பயிற்சியளிக்கும் தரமான பயிற்சி மையங்களை நாடுவது பெற்றோரின் பர்ஸூக்கும், குழந்தைகளின் நலனுக்கும் நன்மை தரக்கூடியது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Schoolboy - chennai,இந்தியா
05-ஏப்-201214:03:59 IST Report Abuse
Schoolboy நன்றாக பயிற்சி கொடுத்தால் பரவாஇல்லை. கத்துகுட்டிகள் வைத்து கொண்டு கடனுக்கு சொல்லி கொடுக்கிறார்கள். அந்த குட்டிகள் எதையுமே செய்து காண்பிப்பதில்லை. வாயால் மட்டுமே சொல்கிறார்கள். நாங்கள் எப்படி kattru கொள்வது?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
03-ஏப்-201207:08:38 IST Report Abuse
ஆரூர் ரங கோடை வகுப்புக்கள் குழந்தைகளின் சிறப்புத் திறமையைக்(Aptitude )கண்டறியும் வாய்ப்பை பெற்றோருக்குக் கொடுக்கின்றன. பல குழந்தைகளினுள்ளே உள்ள வெளியே தெரியாத திறமைகள் தெரியவருகின்றன.குழந்தையின் நாட்டம், ஆர்வம்(Interest) என்பது வேறு, திறமை என்பது வேறு. இவற்றைக் குழப்பைக்கொள்ளகூடாது.இது சாதாரண ரெகுலர் பள்ளிகளில் நடக்காது.)பின்னர் அத்துறைகளில் பெற்றோர் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாமே சும்மா எல்லோரையுமே மருத்துவம் Engg மட்டுமே படிக்கவேண்டும் என வற்புறுத்துவதற்கு பதில் அவரவர்க்குள்ள சிறப்புத் திறமையினை வெளிப்படுத்தி,பண்படுத்தி அந்தத துறையிலேயே படிக்கவைக்கலாமே .சரியான வழி காட்டுதல் இருந்தால் சாதாரணனும் சிறந்தவனாகலாமே.
Rate this:
Share this comment
Cancel
Shri - North America - Pennsylvania,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201218:28:05 IST Report Abuse
Shri - North America இரண்டு மாதங்கள் இவையனைத்தையும் கற்றுத் தெரிந்து கொள்வதால் என்ன பலன் என்று இந்த கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் நடத்துவோருக்கு மட்டுமே வெளிச்சம். உதாரணத்துக்கு ஒரு குழந்தை இரண்டு மாதங்கள் இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நிறுத்தி விடுவதால், கற்றுக் கொண்டது முழுவதுமே வீண். மொத்தத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் சிலருக்கு பணம் காய்க்கும் மரமாகவும், மற்றும் சிலருக்கு ஜம்பம் காட்டிக் கொள்ளவுமே உதவும். இந்த உலகில் எதுவுமே இலவசமாக வருவதில்லை. அதனாலேயே இந்த கட்டணமும்.
Rate this:
Share this comment
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
02-ஏப்-201204:39:29 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan குறைகளைக் கூறியது போல் நிறைகளையும் குறிப்பிட்டு இருக்கலாம். அரசு சார்பில் நடக்கும் விடுமுறைக்கால முகாம்களில் பங்கேற்றுப் பயனடையலாம். இவற்றால் பயன்பெற்றோர் மிகுதி.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் /
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-ஏப்-201201:58:46 IST Report Abuse
மதுரை விருமாண்டிஆனா பாருங்க, இந்த பெரும்பான்மையான எல்லா புற்றீசல்களும் தினமலரில் மற்றும் தினசரிகளிலும் விளம்பரம் செய்து தான் மாணவர்களுக்கு வலை வீசுகின்றன.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.