திருநெல்வேலி:அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயகுமாரின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கைதான போராட்டக்காரர்களுக்கு, ஜாமின் வழங்க, கோர்ட் மறுத்து விட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தமிழக அரசின் முடிவின்படி, கடந்த மார்ச் 19 முதல், மின் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகின்றன. அன்று, அணு மின் நிலையம் முன், போராட்டத்தில் ஈடுபட வந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட, 11 பேரை, போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர். அவர்கள், இன்று நெல்லை மாவட்டம், வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சதீஷ், 11 பேரையும், மேலும் 15 நாட்களுக்கு, கடலூர் சிறையில் அடைக்கும்படியும், ஏப்., 16ல் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.
இதனிடையே, இடிந்தகரையில் போராட்ட காலத்தில் மாணவ, மாணவியரையும், பள்ளிக்கு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். இதற்கு, தொடர்ந்து கண்டனங்கள் வந்ததால், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டப்புளியில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரே, கடலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.
போராட்டம் தொடர்பாக, உதயகுமார் மீது, தனிப்பட்ட முறையில், 98 வழக்குகள் உள்ளன. எனவே, அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படியும், வழக்குகள் குறித்து, 15 தினங்களுக்குள் விளக்கமளிக்கும்படியும், மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து, உதயகுமாருக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது.
உதயகுமார், ""நான் சட்டவிரோதமாக செயல்படவில்லை. வழக்குகளை சந்திக்கப் போகிறேன். என் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கப் போவதில்லை'' என தெரிவித்துள்ளார். எனவே, பாஸ்போர்ட் அதிகாரிகள், அதை முடக்கி வைக்கவும், தேவைப்பட்டால் பறிமுதல் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உதயகுமார் அவர்களே, கொஞ்சம் கருணை காட்டுங்கள். நாங்கள் டிவி பார்க்கணும். சென்னையில் IPL பார்க்கணும். சினிமா போகணும். சனி ஞாயிறில் தண்ணி போட்டு கும்மாளம் அடிக்கணும். இதற்கெல்லாம் மின்சாரம் வேணும். தயவு செய்து சீக்கிரம் கூடங்குளம் அணு நிலையை செயல் பண்ண விடுங்கள். உங்கள் ஊர் மக்களுக்கு என்னே நடந்தும் எங்களுக்கு பரவயில்லை.
Hi Dabuk, Thanks for showing some concern for us. It is impossible for me to move my family. My family is not just my parents apart from my wife and kids. It includes my sisters , brothers and their kids. There are are other close relatives too. It is absolutely impossible for an individual to move the entire family. Look the real estate value in India. Do you think every individual has money? If the govt has to do, they can no longer say, nuclear energy is CHEAP. If the govt is to move, the total construction cost must include all these money too. It will simply prove India cannot afford to do nuclear energy at KKNP as the cost is too high. So, for India that is highly populated, nuclear energy is not a great fit. To avoid this cost, the govt including Dr.Kalam says it is 100% safe. The 100% safety of KKNP is a trick game played by the govt with the poor people who have no support. We know it is never 100% and it can never be.
The cost is one problem for moving. There is a big problem for the people to adjust in a new place. You have to move the fishermen to similar place. There are people who have shops, they only know it. You need to build different shops for them. There are elderly people who will never be comfor in a new place. It is just very difficult. The whole tem of the life of the local will be broken. Think about school going kids. Kudankulam alone has 7 schools with 2.Hrs Sec schools, 3 high schools. You will not believe how close these schools are, to the compound wall, it is just around 1 KM. One schools is little far (3 KM). Look the people around kudankulam. It will go nowhere.
But, Something could have been done to minimize these issues in this 25 years. You could not have expected people to migrate by themselves. You will not believe how integral our govts work. People get money part of different govt schemes (e.g Kalaignar veettu vasathi thittam etc) to construct houses around the compound wall. Check how many new houses have been constructed in this 25 years.
You also need to know the project was abandoned by the govt once for several years and then 12 years ago they restarted again. You cant just expect people to move back and forth like this.
I strongly believe KKNP is not justified at a very populated place . We have done a mistake and we have never corrected or adjusted things around the issue. Many people dont know the real issue about why there is a protest.
This is is not just some people are against getting electricity for India.
If foreign organisations want to help Indian poor they can do it through Government. Why they give money to Christian organisations only. If they really verify the things they can find that the money they s is little utilised for helping poor and much is used for religious conversions and real estates.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தர இயலாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு சூசகமாக நிராகரித்துள்ளது. மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும் அணு மின் நிலையம் அமைந்துள்ள மாநிலத்திற்கு 50% மின்சாரம் தான் வழங்கப்படும் என்றும், மத்திய அரசுக்கு 15 சதவீதமும்,எஞ்சிய மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
எவளுடைய தாலிய அறுத்தேனும் எனக்கு மின்சாரம் கெடைக்கணும். தமிழனுடைய பல தலைமுறை புத்து நோயால செத்தாலும் பரவாயில்ல, அணுகுண்டுக்கு மூலப் பொருளான புளூட்டோனியத்த அணுவுலை மூலமா எடுத்து, அணுகுண்டு செஞ்சு தெற்கு ஆசியாவையே மிரட்டுற தாதாவா ரவுடியா ஆகணும். எனக்கு வல்லரசு ஆகணும். அதுக்கு அணுகுண்டு வேணும் அது கெடைக்க அணுவுலை கூடங்குளத்துல சீக்கிரம் ஆரம்பிக்கணும் சீக்கிரம் வல்லரசு... வல்லரசா ஆயிருவேன்... தண்ணிகூட குடுக்க முடியல்லியா மக்களுக்கு? மக்களுக்கு குடிக்க தண்ணீ இல்லேண்னா.. எனக்கு என்ன? சோறு இல்லாம செத்தா என்ன எனக்கு? நான் வல்லரசு ஆகணும்... அணுகுண்டு செய்யணும்.. அதுக்கு அணுவுல வேணும்.. விட மாட்டேன்... வல்லரசு ஆயியே தீருவேன், அஞ்சு விழுக்காடு மக்களுக்குத்தான் கழிவறையா..? அதப்பத்தியெல்லாம் எனக்கென்ன? அதுவா முக்கியம்? வல்லரசு ஆகிறதுதான் முக்கியம், அணுகுண்டுதான் முக்கியம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.