நாட்டின் மூத்த பார்லிமென்டரியன்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லா, 18 மாத இடைவெளிக்கு பின், மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த பழுத்த அனுபவம் உள்ளவர். ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்தபோது, சபை நடவடிக்கைகளை திறம்பட நடத்தி, அனைவரின் பாராட்டைப் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.
நஜ்மா, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர். உயிரியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்.கடந்த, 1966ல் ஆராய்ச்சி மாணவியாக இருந்தபோது, சமூக சேவையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதன்பின் அரசியலில் புகுந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மும்பை காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய நஜ்மா, முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்தார். நஜ்மாவின் கல்வி மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்த, முன்னாள் பிரதமர் இந்திரா, 1980ல், இவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கி அழகு பார்த்தார். இதன்பின், ராஜிவ் பிரதமரானபோது, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது நஜ்மாவுக்கு 45 வயது தான்.
நரசிம்மராவ் பிரதமரானபோதும், அவரிடம் நஜ்மாவுக்கு நற்பெயர் கிடைத்தது. சோனியா, காங்., தலைவரானதும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நஜ்மா ஓரம் கட்டப்பட்டார். "காங்கிரசை விட, காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவரான வி.பி.சிங்கிற்கு தான், நஜ்மா அதிக விசுவாசமாக இருக்கிறார்' என, சோனியா நினைத்தது தான் இதற்கு காரணம்.இதன் பின், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். இதனால், பா.ஜ., துணைத் தலைவர் பதவியும் இவருக்கு கிடைத்தது.
பண்டித நேரு அமைச்சரவையில் பணியாற்றிய டாக்டர் அபுல் கலாம் ஆசாத் உறவுக்காரரான இவர், அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி பெருமை சேர்த்தவர். அரபு நாடுகளுக்கு ஒரு நல்லெண்ணத் தூதராக தொடர்ந்து கருதப்பட்ட நஜ்மா, பாக்தாத் சென்று அன்றைய ஈராக் அதிபர் சதாம் உசேனைச் சந்தித்தது உண்டு. அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய் கொடுத்தனுப்பிய செய்தியையும் அவர் சதாமிடம் அளித்தார்.அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பதவிக்கு ஆசைப்படுவது உண்டு. ஆனால், திறமைமிக்க, சொல்லாட்சி நிறைந்த பேசும் கலை கொண்ட இவர், தான் வகித்த பதவிகளுக்கு கவுரவம் தந்திருக்கிறார்.மீண்டும் ராஜ்யசபாவில் நஜ்மாவின் குரல் ஒலிக்கப் போகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்றைய சூழ்நிலையில் இவரே ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். பிரதிபா மாதிரி பதவிக்கு வர வேண்டியதில்லை. சுய சிந்தனை உள்ளவர். முற்போக்கு சிந்தனைகள் கொண்ட இஸ்லாமிய பெண். ஆதலால் இஸ்லாமிய பெண்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. இஸ்லாமிய ஆண்கள் மறுக்க முடியாது. லொள்ளு பிரசாத், திக் விஜயசிங் போன்றவர்கள் எதிர்த்தால் உண்டு.
பாராளுமன்ற விவகாரங்களில் இவரிடம் பாராட்டும்படியான பல நல்ல குணங்கள் உண்டு. ஆனால் முன்கோபம் , சற்றே அகந்தை போன்ற ஒரு சில நல்லன அல்லாத குணங்களும் உண்டு. பிஜேபி இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதாலேயே இவர் நல்லவராக இருந்தும் வெகு திறமைசாலியாக இருந்தும் ஜால்ரா குணம் இல்லாமையால் இவரை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்தது. அதன் விளைவாக சொக்கவைக்கும் சோனியாவை மகிழ்விக்க பிரதீபா பாட்டி குடியரசுத்தலைவியானார்.
இருந்துவிட்டு போகட்டும் . ஆனாலும் ( வெறியின் காரணமாக ) தான் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்தவர் . அதே நேரம் உங்கள் கட்சியின் சார்பில் உரம் மற்றும் இரசாயனத்துறை கேபினட் அமைச்சராக இருப்பவர் பதவி ஆசையே இல்லாமல் துறவி போல மாதம் ஒரு தீவு என்று குடும்பத்துடன் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். பாராளுமன்ற நிகழ்வுகளில் முக்கியமானதாக கருதப்படும் பட்ஜெட் சமர்ப்பிக்கும் தினத்தன்று கூட வட திசைக்கு தலை காட்டாமல் இருந்து பதவியின் பெருமையை நிலை நாட்டியுள்ளதை ஏன் மறுக்கிறீர்கள்? தன கடமையை எந்த கட்சியில் இருந்து திறம்பட ஆற்றினாலும் அவர்களை நாம் பாராட்டவேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.