காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு | காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு

Added : ஏப் 03, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம் : காதல் திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு இளம்பெண் விழுப்புரம் போலீசில் மனு அளித்தார்.
விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தை சேர்ந்த தேவராசு மகள் வனிதா, 23. இவர் தனது கணவர் ரங்கராஜ் என்பவருடன் வந்து விழுப் புரம் தாலுகா போலீசாரிடம் கொடுத்த மனு:
கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரங்கராஜ்,26 என்பவருக்கும், எனக்கும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2007ம் ஆண்டு பதிவு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த எனது தந்தை தேவராசு மற்றும் தாய் கல்யாணி, அண்ணன் சவுந்தரராஜன் மற்றும் உறவினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் என்னை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.
நாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் கொலை செய்துவிடுவதாக எனது உறவினர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X