கோல்கட்டா அணியின் மிகப் பெரிய பலம் பேட்டிங் வரிசை. காம்பிர், காலிஸ், பிரண்டன் மெக்கலம், யூசுப் பதான், மனோஜ் திவாரி, இயான் மார்கன், பிராட் ஹாடின் என முன்னணி பேட்ஸ்மேன்கள் நிறைய உள்ளனர். இவர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து நெருக்கடி கொடுக்கலாம். கடந்த தொடர்களில் சிக்சர் மழை பொழிந்த யூசுப் பதான், பிரண்டன் மெக்கலம், இம்முறையும் அசத்தலாம். வேகத்தில் அனுபவ பிரட் லீ, காலிஸ் இக்பால் அப்துல்லா, ரேயான் டென் டசாட்டே ஆகியோர் உள்ளனர். இவர்களுடன், ஐ.பி.எல்., அரங்கில் முதன் முதலில் "ஹாட்ரிக்' சாதனை படைத்த பாலாஜி இருப்பது கூடுதல் பலம். சுழலில் சாகிப் அல் ஹசன், ராஜாத் பட்டியா, யூசுப் பதான் சாதிக்க காத்திருக்கின்றனர். கோல்கட்டா அணியை பொறுத்தவரை ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில், நெருக்கடியில்லாமல் விளையாடி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் வீரர்கள் மீது குறை கூற முடியாது.
கடந்த 2008ல் கங்குலி தலைமையில் களமிறங்கிய கோல்கட்டா அணி 6வது இடம் பிடித்து ஏமாற்றியது. பின் 2009ல் நடந்த தொடரில், அப்போதைய பயிற்சியாளர் ஜான் புக்கானனின் "சுழற்சி முறையில் கேப்டன்' என்ற புதிய திட்டத்துக்கு பலத்த அடி கிடைத்தது. பிரண்டன் மெக்கலம் தலைமையில் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு கடைசி இடம் (8வது) கிடைத்தது. இதனால் மீண்டும் 2010ல் நடந்த தொடருக்கு கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் எவ்வித பலனுமில்லை. மீண்டும் 6வது இடம் பிடித்தது. இதனால் 2011ல் நடந்த தொடருக்கான ஏலத்தில் கேப்டன் கங்குலியை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை. கோல்கட்டா அணி நிர்வாகம் காம்பிரை கேப்டனாக நியமித்தது. இதில் கோல்கட்டா அணி, முதன்முறையாக "நாக்-அவுட்' சுற்றுக்கு சென்று, நான்காவது இடம் பிடித்தது.
அணி விவரம்: காம்பிர் (கேப்டன்), காலிஸ், பிரண்டன் மெக்கலம், யூசுப் பதான், மனோஜ் திவாரி, இயான் மார்கன், பிராட் ஹாடின், சுக்லா, ராஜாத் பட்டியா, டசாட்டே, சாகிப் அல் ஹசன், மன்விந்தர் சிங், ஜேம்ஸ் பட்டின்சன், பிரதீப் சங்வான், இக்பால் அப்துல்லா, பாலாஜி, பிரட் லீ, ஜெயதேவ் உனத்கத், சுனில் நரைன், மார்சன்ட் டி லாங்கே, சஞ்சு சாம்சன், சராப்ஜித் லட்டா, ஷாமி அகமது, இரேஷ் சாக்சேனா, சிராக் ஜானி, தெபாப்ரதா தாஸ்.
பயிற்சியாளர்: டிரிவர் பெய்லிஸ் (ஆஸ்திரேலியா)
ஆலோசகர்: வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
காம்பிர்: இந்திய அணியின் துவக்க வீரராக அசத்தி வரும் காம்பிர், கடந்த முறை கேப்டனாக பொறுப்பேற்று, அணியை முதன்முறையாக "நாக்-அவுட்' சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இதுவரை 55 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 10 அரைசதம் உட்பட 1475 ரன்கள் எடுத்துள்ளார். டில்லி, கோல்கட்டா அணிகளுக்கு 30 போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ள இவர், 17 வெற்றி, 13 தோல்வியை பதிவு செய்துள்ளார்.
யூசுப் பதான்: சிக்சர் அடிப்பதில் கெட்டிக்காரரான யூசுப் பதான், 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார். இதுவரை 58 போட்டியில் ஒரு சதம், 6 அரைசதம் உட்பட 1294 ரன்கள் எடுத்துள்ள இவர், 74 சிக்சர் அடித்துள்ளார். இவரது சிக்சர் மழை இம்முறையும் தொடரலாம்.
காலிஸ்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதம் (14) அடித்தவர் என்ற பெருமை பெற்றுள்ள காலிஸ், இதுவரை 57 போட்டியில் பங்கேற்று 1556 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை பெற்றுள்ள இவரை, விரைவில் வெளியேற்றாவிட்டால் எதிரணிக்கு சிக்கல்தான்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.