சென்னை :மின் கட்டண உயர்வால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் வகையில், கூடுதலாக 740 கோடி ரூபாய்க்கு மானியம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வீட்டு மின் பயனீட்டாளர்களுக்கு, மின் கட்டணம் குறைகிறது.
கோரிக்கை ஏற்பு
தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல், மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக மின் வாரியத்திற்கு, 7,874 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், மின் கட்டணங்கள் உயர்த்தப் பட்டன. இதில், 1,118 கோடியே 44 லட்சம் ரூபாய் மானியத்தை, ஏற்கனவே வழங்கி வருகிறது. கட்டண உயர்வின் போதும், மானியத் தொகையை அரசு அறிவித்தது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், மேலும், 740 கோடி ரூபாய்க்கு மானியச் சலுகைகளை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதனால், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறைகிறது. இந்த சலுகைககள் மூலம், ஒரு கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சலுகை தொடரும்
வீட்டு உபயோக பயனீட்டாளர்களுக்கு மட்டுமே, இந்த கட்டணக் குறைப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, குடிசைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 2 ரூபாய் 50 காசு எனக் கணக்கிட்டு, மாதம் ஒன்றுக்கு, 60 ரூபாய் கட்டணம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதை, தமிழக அரசே முழுமையாக ஏற்கிறது. இதன்மூலம், 14 லட்சம் பேர் பயன்பெறுவர். விவசாயத்திற்கான மின் கட்டணத்தை, குதிரைத் திறன் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, 250 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக மாற்றப்பட்டது. இந்த கட்டணத்தையும், அரசே முழுமையாக ஏற்கிறது. இதன்மூலம், விவசாயிகள், மின் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே, மின்சாரத்தை தொடர்ந்து பெறலாம்.
மானியம் எவ்வளவு (ஆண்டுக்கு) ரூ/கோடி
கட்டண உயர்வின் போது அறிவிக்கப்பட்டது 3554.16
சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ள தொகை 740.00
மொத்தம் 4294.16
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.