புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை

Added : ஜூலை 21, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை