மதுரை:""இந்தியாவின் சர்வதேச வர்த்தகம், 77 சதவீதம் கடல்வழி மூலமாகவே நடக்கிறது,'' என ஆர்.எல்.,இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.இந்தியாவின் முதல் நீராவி கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி, லண்டனுக்குச் சென்றதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி, தேசிய கடல்சார் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மதுரை அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸில், நேற்று இந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.முதல்வர் எம்.சுப்ரமணியன் வரவேற்றார். தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தேசியக் கொடியையும், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு கல்லூரி கொடியையும் ஏற்றினர்.கல்லூரி தலைவர் பேசியதாவது: சிந்துச் சமவெளி காலம் தொட்டு, இந்தியா குறிப்பிடத்தக்க கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.இந்தியா, பல ஆயிரம் கி.மீ., கடற்கரையுடன், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்பு, இந்தியாவின் கடல் வணிகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
கப்பல்களால் கடல் வணிக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தடுப்பு தொடர்பான சர்வதேச கடல்சார் அமைப்பில் இந்தியா 1959ல் உறுப்பு நாடானது.இந்தியாவின் 90 சதவீத சர்வதேச வர்த்தகத்தில், 77 சதவீதம் கடல் வணிகம் மூலமாகவே நடக்கிறது. கடல்வழித்தட வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு போன்றவை நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் இன்றியமையாதது, என்றார்.நிகழ்ச்சியில் கடல்சார் பயணங்களில் உயிர்நீத்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டிகள், நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.