காதலித்து ஏமாற்றிய பொறியாளர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தாம்பரம்: பொறியியல் படித்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், லட்சுமிபுரம் விரிவை சேர்ந்தவர் சர்மிளா,32. பொறியியல் பட்டதாரி. இவர், தாம்பரம் மகளிர் போலீசில், நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு பி.இ., படித்தபோது, என்னுடன் படித்த வண்டலூரை சேர்ந்த கார்த்திகேயன்,32, என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை அவர் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, தனக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் முடிந்த பின், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். இருவருக்கும் திருமணம் முடிந்தும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய தாயின் தூண்டுதலின்படி, பத்து வருடங்களாக காதலித்த என்னை, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்