புவனேஸ்வர்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் இந்தியாவுக்கு பெருமை கிடைப்பதுடன், பல நாடுகளும் கண்டு மிரளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். நேற்று இரவு 8.30 மணியளவில் அக்னி ஏவுகணை சோதித்துப்பார்க்கப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை இன்று காலை நடத்தப்பட்டது. .
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்; இது போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் மட்டுமே சோதனை செய்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியடைவது மூலம் இந்தியாவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறுகிறது. 17 மீ., உயரமும், 50 டன் எடையும் உள்ள அக்னி 5 ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது. மேலும் இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்களை கொண்டு செல்லும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர்- ஏ. கே., அந்தோணி வாழ்த்து: இன்று அக்னி- 5 வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில்; நாட்டின் பெருமைக்கு அரும்பாடுபட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பணியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஏ.கே., அந்தோணி போனில் விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். இவர் இது குறித்து கூறுகையில்; இந்த அரிய வெற்றி மூலம் இந்தியா உயர்ந்து நிற்கிறது. இது அரும்பெரும் வெற்றி ஆகும். இது நாட்டின் மற்றொரு மைல்கல் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அண்ணே அக்னி 5 இருக்கட்டும், இது ஜுஜுபி தான் பிரமோஸ் உடன் பார்க்கும் போது. முதலில் ப்ரம்மோசை 1500 km ரேஞ்சுக்கு மாற்றுங்க. அப்புறம் பாரு எல்லாரும் நம்மள கண்டு பயபடுவான். பிரம்மோஸ் ஸ்பீட் mach 10 அதாவது கிளம்பிய பிறகு ஒரு நொடிக்கு 12 km ஸ்பீடு . அத செய்யுங்க விஞ்ஞானிகளே அத்துடன் 99 . 99 அக்குரசி. அதாவது டார்கெட் பிக்ஸ் பண்ணிட்டால் அந்த டார்கெட் அம்பலேலு தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.