துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது| Dinamalar

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது

Added : ஜூலை 22, 2010 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஐதராபாத் : துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள "பார்க் வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார்.

இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எ.ஆனந்தகுமார் - Chennai.,இந்தியா
23-ஜூலை-201016:44:28 IST Report Abuse
எ.ஆனந்தகுமார் இவர்களை நிராயுதபணியாக மலை உச்சியில் கை மற்றும் கால்களை கட்டி நிற்க விட வேண்டும். அப்போது தான் திருந்துவார்கள் ......
Rate this:
Share this comment
Cancel
செந்தில் - Coimbatore,இந்தியா
23-ஜூலை-201012:33:50 IST Report Abuse
செந்தில் வாத்தியாருக்கே புத்தி சரி இல்லாத நாடு எப்படி 2020 வல்லரசா மாறும்ன்னு தெரியல............. ஆண்டவனுக்கே வெளிச்சம்........
Rate this:
Share this comment
Cancel
sundar - chennai,இந்தியா
23-ஜூலை-201007:40:23 IST Report Abuse
sundar அந்த பள்ளி முதல்வருக்கு இரக்கம் காட்டாமல் மரணதண்டனை கொடுக்கவேண்டும். அதையும் உடனே நிறைவேற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
C V Sundaramoorthy - Coimbatore,இந்தியா
23-ஜூலை-201004:11:54 IST Report Abuse
C V  Sundaramoorthy பொதுமக்களே, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களே, பார்க் வுட் சர்வதேச பள்ளியின் முதல்வருக்கு இந்த முறையில் பாடம் கற்பிப்பதில் நாட்டம் இருக்கும் பட்சத்தில் அவர் வீட்டிலேயே தன இஷ்பட்ட தொழிலை தனது மனைவியுடன், பெற்ற பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் இதில் தேவைப்ப்படும்போதேல்லாம் ஈடுபட்டு சந்தோஷப்பட்டிருக்கலாமே அதை விட்டு ஊரான் பெண்ணை துப்பாக்கி முனையில் பயமுறுத்தி எதுவுமே அறியாத குழந்தையை பாலினப் பிரயோகத்திற்கு பலவந்தப்படுத்தியதை மன்னிக்கவே கூடாது. இவருக்கு மிகவும் கடுமையான தண்டனைமட்டுமே வழங்கப்படவேண்டும். எக்கரனத்தைக்கொண்டும் இனிமேல் இவர் இந்த எண்ணத்தையே மறக்கும்படி செய்ய வேண்டியது மிக மிக முக்கியம். தயவு செய்து தகுந்த விசாரணை மேற்கொண்டு அதி விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை