madurai district news | சாத்தையாறு அணையில் மீன் பண்ணை மூடல் : மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தி வைப்பு| Dinamalar

தமிழ்நாடு

சாத்தையாறு அணையில் மீன் பண்ணை மூடல் : மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தி வைப்பு

Added : ஏப் 20, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சாத்தையாறு அணையில் மீன் பண்ணை மூடல் : மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தி வைப்பு

பாலமேடு : சாத்தையாறு அணை வறண்டு வருவதால் மீன் பண்ணை மூடப்பட்டது. தண்ணீர் இல்லாததால் மீன் குஞ்சுகள் வளர்ப்பும் நிறுத்தப்பட்டது.
அணையின் கொள்ளளவு 29 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகள் 450 எக்டேர்.
சிறுமலை, காட்டுநாயக்கன் ஓடை, மஞ்சமலை ஓடையில் இருந்து அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணை நீர் மூலம் எர்ரம்பட்டி, சின்னணம்பட்டி, கோவில்பட்டி, ஆதனூர் (கட்டிக்காரன் கண்மாய், குறவன்குளம்), கோணப்பட்டி உட்பட 11 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை சார்பில் அணை பராமரிக்கப்படுகிறது.


மீன் குஞ்சு வளர்ப்பு: சாத்தையாறு அணையில் மீன் பண்ணை உள்ளது. கட்லா, கெண்டை, மிருகால், திலேபியா, ஜாதி மீன்களின் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. ஆண்டு தோறும் ஐந்து லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, வைகை அணை உட்பட பிற அணைகளுக்கு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக அணையில்
போதுமான தண்ணீர் இருந்ததால் அணையில் மீன்களும், மீன் பண்ணையில் மீன் குஞ்சுகளும் வளர்க்கப்பட்டன. கோடையை முன்னிட்டு அணை வறண்டு வருவதால் மீன்கள் மற்றும் குஞ்சுகள் வளர்ப்புக்கு தேவையான தண்ணீர் இல்லை. இதனால் மீன் பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது.


மீன் விலை உயரும்: இனப்பெருக்கத்திற்காக கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. கோடை காரணமாக அணைகள் வறண்டு வருவதால், மீன் வளர்ப்புக்கு வழியில்லை. தண்ணீர் உள்ள கண்மாய்களில் மட்டும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தாண்டு மீன் உற்பத்திக்கு வழியில்லாததால் விலை உயரும்.
கடல் மீன்கள், அணை மீன்களுக்கு வழியில்லாததால் கண்மாய் மீன்களுக்கு மவுசு அதிகரிக்கும். மறுகால்களில் வலை வரித்து மீன்களை பிடிப்பதற்காக கண்மாய் தண்ணீரை சிலர் வெளியேற்றி வீணாக்குவதால், அடுத்தகட்ட மீன் வளர்ப்புக்கு வழியில்லை. தண்ணீரை வீணடிப்போர் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X