Beggars not to be questioned about their income : Govt., to castewise census employees | பிச்சையில் கிடைக்கும் வருமானத்தை கேட்க கூடாது: ஜாதி வாரி கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சையில் கிடைக்கும் வருமானத்தை கேட்க கூடாது: ஜாதி வாரி கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை

Added : ஏப் 25, 2012 | கருத்துகள் (15)
Advertisement

சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பில், பிச்சைக்காரர்கள் பற்றி விவரம் சேகரிக்கும் போது, அவர்களின் வருமானத்தை கேட்கக் கூடாது என, கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் நடைபெறும், சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் அறிய தகவல்கள் திரட்டப்படுகின்றன. சென்னையில், மூன்று நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டு, கணக்கெடுப்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.


சிதையாத கவனம்: தகவல் சேகரிக்கும் போது, சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும், பதில் அளிப்பவரோடு முரண் பாடாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பதில் சொல்லவைப்பதோ கூடாது. தேசிய அளவில் புதிய கொள்கை முடிவு எடுக்க, வீடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான புதிய திட்டங்களை உருவாக்க, கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், சரியாக பதில் அளிக்கும் ஆண் மற்றும் பெண்ணிடம் தகவல்களை திரட்ட வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் தரும் தகவல்களை பதியக் கூடாது. பதிலளிப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். தவறினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கணக்கெடுப்பாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.


தொழிலாகிப்போனது பிச்சை: குடும்ப உறுப்பினர்களின் வருமானத்திற்கு ஆதாரமாக, குப்பை பொறுக்குபவர், வீட்டு வேலை செய்வோர், நடைபாதை வியாபாரி, செருப்பு தைப்பவர், கூவி விற்பவர், தெருக்களில் தொழில் செய்யும் மற்றவர்கள், கட்டுமானப் பணியாளர், குடிநீர் குழாய் பழுது பார்ப்பவர், கொத்தனார், வர்ணம் பூசுபவர், வெல்டர், பாதுகாப்பு காவலர், கூலி மற்றும் தலைமை பணியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், வீட்டு வேலை செய்பவர், கைவினைஞர், கை தொழில், தையல் காரர், போக்குவரத்து பணியாளர், ஓட்டுனர், நடத்துனர், ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உதவியாளர், வண்டி இழுப்பவர், இயந்திரங்கள் பொருத்துபவர், பழுநீக்குபர், சலைவைத் தொழிலாளி, இரவு காவலாளி, ஓய்வூதியம், வாடகை, வட்டி வாங்குபவர், எந்த வருமானமும் இல்லாதவர், என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிச்சை எடுப்பதையும் ஒரு தொழில் வகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிச்சையில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என, கணக்கெடுப்பின்போது கேட்கக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வடபழனியில் பிச்சை எடுக்கும் பாக்கியராஜ் கூறுகையில், ""பிச்சை எடுப்பவர்களை எல்லாம் பணக்காரர்கள்போல் சித்தரிக்கின்றனர். இதில் எவ்வளவு வருமானம் கிடைக்கப்போகிறது. வருமானம் ஈட்டும் தொழிலாக பிச்சையை கருதி, கணக்கெடுக்க வேண்டுமா,''என்றார். ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ""பிச்சை எடுப்பதும் வருமானத்தை ஈட்டக்கூடிய தொழிலாகிப் போனது. நாட்டில், எத்தனை பேர் பிச்சை எடுக்கிறார்கள் என, அறிந்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க, அரசு தகவல் சேகரிக்கிறது,''என்றார்.


- ஆர்.மோகன்ராஜ் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balachandran - chennai,இந்தியா
26-ஏப்-201215:43:24 IST Report Abuse
Balachandran பிச்சை எடுக்கவே விடக்கூடாது,தானம் கொடுக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
26-ஏப்-201211:50:44 IST Report Abuse
Daniel Joseph மொத்தத்தில் கணக்கெடுப்பு போறவங்க அவங்க ஜாதி மதம் கேட்க கூடாது. மொத்தத்தில் அரசு வருமானம் வீணாக செலவழிக்க படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
26-ஏப்-201209:57:52 IST Report Abuse
Lightning View கௌரவா பிச்சை (லஞ்சம்) எடுப்பவர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்து சுருட்டுபவகளைவிட பிச்சை காரர்கள் எவ்ளோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-201209:21:25 IST Report Abuse
பிட்சைக்கரன்களோட வருமானத்தை கேட்டாலும் சொல்லமாட்டாங்கப்பா. பின்னாடி "income tax " பிரச்சனை வரும் ல.
Rate this:
Share this comment
Cancel
abu - Trichy,இந்தியா
26-ஏப்-201209:02:21 IST Report Abuse
abu பெங்களூரில் சோனி வேர்ல்ட் சிக்னல் என்று ஒரு இடம் ....... இங்கே பிச்சை எடுத்தால் எவ்வளவு வரும் என்று பார்ப்போம் ......... காலை எழு மணி முதல் மாலை எட்டு மணி வரை .........ஒரு மணி நேரத்துக்கு நூறு ருபாய் என்று வைத்துக்கொண்டால் குட ......... சராசரியாக ஒரு நாளைக்கி சாப்பாடு மற்றும் வெய்யில் நேரம் போக குறைந்தது 600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் .......... மொத்ததில் ஒரு மாதத்தில் விடுமுறை நாட்கள் கழித்து பாத்தாலே அவர்கள் 12000 முதல் 15000 வரை வருமானம் இருக்கிறது .......... இவர்கள் எந்த விதத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருத முடியும் ............ ஒருவருடைய ஆடையை வாதிதான் அது முடிவு செய்ய படுகிறது ............ படித்த இளைஞர்கள் பலர் மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள்........... என்ன உலகமடா இது .........
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
26-ஏப்-201208:18:11 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அதாவது அதிகார வர்க்கத்தினர் எடுக்கும் (லஞ்ச)பிச்சையை கணக்கெடுக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-201206:25:53 IST Report Abuse
Kasimani Baskaran கோபால புரத்துக்காரருக்கு எவ்வளவு வருமானம் என்று யாராவது கேட்டு சொல்லுங்கப்பா? ரொம்ப குறைவாக சம்பாதித்தால் அவரை "பிச்சைக்காரர்கள்" பட்டியிலில் சேர்த்து விடவும்
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
26-ஏப்-201206:22:38 IST Report Abuse
kundalakesi இரண்டு மூணு வீடு வைத்த பிச்சைகாரர்கள், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு ஆடோ வில் பயணித்து, வேஷமிட்டு பிச்சஎடுப்போர் , என இவர்கள் விவரங்களை பத்திரிகைகள் தான் கொண்டு வருமோ?
Rate this:
Share this comment
Cancel
Sak Raja - wembley,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201205:49:05 IST Report Abuse
Sak Raja போங்க சார்...அப்புறம் லஞ்சப்பனத்திலே வர்ற வருமானத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்.. அப்புறம் நான் ரெம்ப கொவிச்சுக்குவேன்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஏப்-201205:31:13 IST Report Abuse
villupuram jeevithan அதேபோல் திருட்டு தொழில் செய்பவர்களிடம் வருமானத்தை பற்றி கேட்கலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை