TN govt., announces special offer packages for Solar Power Generating companies | சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தால் சலுகை: புது திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (140)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: கடுமையாக மின்வெட்டு நிலவும் தமிழகத்தில், அதன் கடுமையைப் போக்கும் வகையில், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மின்சார உற்பத் தியை மேற்கொள்ள புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபையில் எரிசக்தித் துறைக்கான மானியத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

வீடுகளில்...: சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில், தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை முதல்வர் வெளியிடுவார். மேலும், அரசு துறைகளை இதற்கு எந்தளவு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அறிக்கையையும் முதல்வர் விரைவில் வெளியிடுவார். 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்படும். வீட்டு உபயோக, மேற்கூரை சூரியசக்திக்கு, 2012-13ம் ஆண்டில், அதிகபட்சமாக மொத்தம் 50 மெகாவாட் மின் உற்பத்திக்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண்டின் மொத்த மின் பயனீட்டுச் சதவீதப்படி, மேற்கூரை மூலம் அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல்வகை மின் பயனீட்டாளர்களுக்கு சூரிய மேற்கூரை மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.

விவசாயம்: விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, மானியத்துடன் கூடிய சூரிய ஒளி பம்புகள் வழங்கப்படும். இதன்படி. விவசாய அமைச்சகத்திடம் இருந்து 56 சதவீதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இருந்து 30 சதவீதம் என 86 சதவீத மானியம் வழங்கப்படும். மீதம் 14 சதவீத விலையை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் பட்டியலிடப்பட்ட தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்களிடம் செலுத்தி, சூரிய ஒளி பம்புகளை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் 5.25 லட்சம் செலவில், பத்து கிலோவாட் திறன் உள்ள எட்டு காற்று சூரிய கலப்பின அமைப்புகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் தகுந்த இடங்களில், தெரு விளக்குகள் அமைக்கும் வகையில் 42 லட்சம் ரூபாய் செலவில், எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிறுவப்படும்.

காற்றாலை: காற்றாலை மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொண்டு வர, தப்பக்குண்டு, ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையங்களும், அதோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்துக்கு 400 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கப்படும். இந்தத் துணை மின் நிலையங்கள், சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் மூலம் அமைக்கப்படவுள்ள, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். செயல்விளக்க காற்றாலைப் பண்ணைகளை மீண்டும் திறன் உயர்த்தி, 160 மெகாவாட் மின்சாரம்

Advertisement

(காற்று சக்தி 80 மெகாவாட் மற்றும் சூரியசக்தி 80 மெகாவாட்) உற்பத்தி செய்ய, எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின்சார வாரியத்துக்கும் இடையே, தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா என்ற பெயரில் ஏற்படுத்தப்படும். நேப்பியர் கம்பு கலப்பினப்புல் மற்றும் பீமா மூங்கில் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகள் பரிசீலிக்கப்பட்டு, 10 மெகாவாட் திறன் கொண்ட தாவரப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தி மின் நிலையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல் வகை மின் பயனீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (140)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja narayanan - ottawa,கனடா
28-ஏப்-201217:12:44 IST Report Abuse
raja narayanan வாய்ப்பு கொடுங்கள் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு, கெஞ்சி , கதறி விட்டு இபோழுது வாய்ப்பு கொடுத்த மக்கள் தலையிலேயே கையை வைப்பது வரம் கொடுதவர்கலேயே வருது எடுப்பது போன்றது . இதற்காக தி மு க சிறந்தது என்று சொல்ல வரவில்லை . ஆனால் ஜே தன்னுடன் இருபவர்களை சிறிது கட்டுபடுத்த வேண்டும் . ஊழல் மீண்டும் தலைய தூக்க துடங்கி விட்டது . இதை கட்டுபடுதவிடில் இனி ஒரு போதும் ஆ தி மு க ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லாமல் பொய் விடும் . அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தால் , அந்த நினைப்பே ஆ தி மு க ஆட்சியல் கொன்று விடும். எங்கும் வரி எதிலும் வரி என்று தனுடைய வருமானம் முழுவதும் வரியாய் கொடுத்து கொண்டு இருக்கும் ஒவொரு பாவப்பட்ட தமிழன் மற்றும் இந்தியனுக்கும் , இனி எந்த விதமான விலை ஏற்ற்றதையும் திணிக்க எந்த ஒரு அரசுக்கும் உரிமை இல்லவே இல்லை . இதை உணர்வதே ஒவ்வொரு (மாநில மற்றும் மத்திய ) அரசின் கடமையும் ஆகும் ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Deen Kb - Jeddah,சவுதி அரேபியா
27-ஏப்-201223:53:40 IST Report Abuse
Deen Kb கரண்டு கேட்டா காமெடி பண்ணுரிங்க. முதல்ல உதயகுமார புடிச்சு அவருகிட்ட கரண்டு எடுங்க . எல்லாம் சரி ஆயிடும்
Rate this:
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
27-ஏப்-201223:49:03 IST Report Abuse
VSK போயஸ் கார்டன்ல இருக்கா முதல்ல அதைச் சொல்லுங்க, உங்க நிருபரை அனுப்பி:))))
Rate this:
Share this comment
Cancel
Ramesh Chennasamudiram, USA - Cheyenne, Wyoming,யூ.எஸ்.ஏ
27-ஏப்-201221:27:36 IST Report Abuse
Ramesh Chennasamudiram, USA This time looks like this project may work well. You are going to see benefit after few years. Wait and watch. If this project is implemented well, there is a plenty of small business opportunity coming. Catch it if you can.
Rate this:
Share this comment
Cancel
pusparaj - tirupur,இந்தியா
27-ஏப்-201220:44:03 IST Report Abuse
pusparaj நிச்சயம் இது வரவேற்க தக்க திட்டமே... அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் போன்றவை மூலம் மின்சாரம் தயாரிக்க படும்போது சுற்று சூழல் கடுமையாக பாதிக்கபடுகிறது... இது போன்ற சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால் ஆரோக்கியமான சுற்று சூழல் கிடைப்பதுடன்.. மக்களும் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் தன்னம்பிக்கை கிடைக்கும்...அரசு எப்போது மக்களை இலவசங்களையும் மானியங்களை எதிர்பார்க்கும் பிச்சை காரர்களாக வைத்துகொள்ள கூடாது. தன்னம்பிக்கையும் சதக்கும் சக்தியும் உடைய மக்களை உருவாக்குவதே அரசின் வேலை... ஓட்டுக்காக அரசாங்கத்தை கடனில் தள்ளிவிட்டு மானியம் கொடுத்து மக்களை முட்டாளாக்காமல் இருந்த அரசுக்கு நன்றி... இது போன்ற திட்டங்களை வரவேற்போம்...
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
27-ஏப்-201218:14:09 IST Report Abuse
jaikrish நத்தம்-ஆற்காடு இருக்கும் இடம்தான் வேறு ,ரெண்டும் ஒண்ணுதான்.ஆற்காட்டுக்கு மின் வெட்டு துறை அமைச்சர் என்று பெயர் சூட்டியவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள்.இவர்களுக்கு என்ன பெயர் சூட்டுவதாம்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
27-ஏப்-201216:04:43 IST Report Abuse
arabuthamilan இல்லாத ஊருக்கு வழி கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
27-ஏப்-201216:01:33 IST Report Abuse
arabuthamilan உதய சூரியன் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் இந்த திட்டம் வெற்றி பெறும். இவர்கள் வெறும் அறிக்கைகளை விட்டே காலத்தை கடத்துபவர்கள். எங்கே இந்த திட்டம் வரப் போகிறது. ஜெ-யோட கவர்ச்சி திட்டங்களில் இதுவும் பத்தோடு பதினொன்று. இந்த ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஒரு விஷயம்..... இந்த ஜனங்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கப்பா. நம்ம அரசியல் வியாதிகள் எவ்வளவு டூப்ஸ் விட்டாலும் அப்படியே வெள்ளாந்தியா நம்பிடுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
சாதனா - சென்னை,இந்தியா
27-ஏப்-201214:53:25 IST Report Abuse
சாதனா ஸ்ரீனிவாசன், லண்டன் அவர்களே, மோடிக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்றால், அவர் அவ்வாறு நடந்து கொள்கிறார். ஜெயலலிதாவுக்கு எவன் மீண்டும் வாய்ப்பு ‌கொடுப்பான் ? அவர் நடந்து கொள்ளும் லட்சனம் தான் ஊர் அறிந்தது ஆச்சே..
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-ஏப்-201220:20:12 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅவ(ர்)-லட்சணம், அவலட்சணம்.....
Rate this:
Share this comment
Cancel
Balou - PARIS,பிரான்ஸ்
27-ஏப்-201214:38:15 IST Report Abuse
Balou 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மின்சார உற்பத் தியை மேற்கொள்ள எவ்வளவு செலவாகும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.