Pratibha Patil says her foreign visits were crucial for building ties‎ | வெளிநாடு செல்வது ஏன்? ஜனாதிபதி விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாடு செல்வது ஏன்? ஜனாதிபதி விளக்கம்

Updated : ஏப் 30, 2012 | Added : ஏப் 29, 2012 | கருத்துகள் (69)
Advertisement
வெளிநாடு செல்வது ஏன்? ஜனாதிபதி விளக்கம்

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி பிரதிபா நேற்று பேட்டியளித்தார்.

தென் ஆப்ரிக்கா மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பரஸ்பர உறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதி பிரதிபா, அந்த நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக, நேற்று அவர் டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் ஆர்.கே.சிங், ராணுவ செயலர் சசி காந்த் சர்மா உள்ளிட்டேர், அவரை வழி அனுப்பி வைத்தனர்.

தன் பயணத்தின் முதல் கட்டமாக, செஷல்ஸ் செல்லும் பிரதிபா, அந்த நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சமாக, அந்நாட்டு பார்லிமென்டில், பிரதிபா உரையாற்றுகிறார்.

சிறையை பார்க்கிறார்:இதைத் தொடர்ந்து, வரும் 1ம் தேதி, தென் ஆப்ரிக்கா செல்லும் ஜனாதிபதி, அந்த நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், இரு தரப்பு உறவு, வர்த்தக உறவு ஆகியவை குறித்து பேச்சு நடத்துகிறார். ஜனாதிபதி பிரதிபாவுடன், இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினரும் உடன் செல்கின்றனர்.அவர்களும், பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களையும் சந்திக்கிறார். ஜோகன்னாஸ்பர்க்கில், மகாத்மா காந்தி அடைக்கப்பட்டிருந்த சிறையையும், அவர் பார்வையிடுகிறார்.

சுயசரிதை புத்தகம்:ஜனாதிபதி பிரதிபா, வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார். இதைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் இருந்ததை விளக்கி, சுயசரிதை புத்தகத்தை எழுத திட்டமிட்டுள்ளார்.

உறவை மேம்படுத்த: வெளிநாடு பயணம் குறித்து ஜனாதிபதி கூறியதாவது: வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற, மத்திய அரசின் வேண்டுகோளின்படியே, வெளிநாடுகளுக்குச் செல்கிறேன்.இன்னும் கூட, மேலும் மூன்று நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என, அரசு தரப்பில் வற்புறுத்தப்படுகிறது. போதிய கால அவகாசம் இல்லாததால், இது சாத்தியமில்லை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.viswanathan - chennai,இந்தியா
30-ஏப்-201218:25:11 IST Report Abuse
c.viswanathan Is it the Job of President.If so what is necessasity for Prime minister and Minister for foreign affairs. Instead President shall complete ping files in the office.Some one should take up the issue Legally and atleast avoid such repeatitions in future
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஏப்-201217:23:03 IST Report Abuse
Nallavan Nallavan \\\\வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற, மத்திய அரசின் வேண்டுகோளின்படியே, வெளிநாடுகளுக்குச் செல்கிறேன்.இன்னும் கூட, மேலும் மூன்று நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என, அரசு தரப்பில் வற்புறுத்தப்படுகிறது.//// பதவி ஏற்ற காலத்திலிருந்து, நீங்கள் இந்த ஸ்டேட்மென்ட் விட்ட நாள் வரை எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்துள்ளீர்கள். அப்படி என்ன உறவு மேம்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இந்தியாவிடமே கடன் கேட்கும் நிலையிலுள்ள நாடுகளுக்குப் போய் ஏதாவது உளறி விட்டு, அவர்கள் பதிலுக்கு இங்கே வரும்போது அவர்களுக்குக் கடனுதவி செய்யப்படுகிறது. அது திரும்பி வருமா என்பதே கூட ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Vel - Bangalore,இந்தியா
30-ஏப்-201216:27:54 IST Report Abuse
Shanmuga Vel நீங்க ஒவ்வொரு நாட்டுக்கு போகும்போதும் இந்தியாவின் மானம் கப்பல் ஏறும் .இந்திய குடியரசு தலைவர் ஆக எந்த தகுதியும் தேவை இல்லை என்று அவர்கள் தெரிந்து கொள்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
kadar mohideen - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201216:18:59 IST Report Abuse
kadar mohideen ஆபிரிக்காவ பாக்கணும், செல்செஸ் பாக்கணும்னா போய் பாத்திட்டு வாங்க ""மே" டம்..... அதுக்கு ஏன் தினமலர் வாசகர்கள வம்புக்கு இழுக்குறீங்க, பாவம் உங்க சுற்றுபயனத்த கேள்விபட்டதுமே எங்களுக்கு மறுபடியும் மயக்கம் வந்திருச்சு..... அந்த மூணு நாடும் எதுன்னு சொன்ன ""வாழ்த்து"" அனுப்ப வசதியா இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
30-ஏப்-201215:34:47 IST Report Abuse
ganapathy அப்துல் கலாம் இருந்த போது அவரை சுற்று பயணம் செல்ல ஏன் மத்திய அரசு கேட்டுக்கொள்ள வில்லை. இந்த அம்மா ஊரை சுத்தணும். ஏற்கனவே ஊழல் வாதி. இப்போ புனாவில் அரசு செலவில் நிலம் ஒதுக்கியதில் பிரச்சனையை. யாருக்கும் வெட்கம் இல்லை. இவருக்கும் வெட்கம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201215:11:38 IST Report Abuse
Yaro Oruvan எரியிற வூட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்.. பின் குறிப்பு - இதற்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இல்லை. அது சரி பாட்டியோட பதவி முடியப்போகுற நேரம் நெருங்கிருசசு அப்படின்னு சொன்னாவ.. அப்புடியா??
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Vel - Bangalore,இந்தியா
30-ஏப்-201214:58:19 IST Report Abuse
Shanmuga Vel சாகும் வரை சுற்றுலா விரதம்
Rate this:
Share this comment
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30-ஏப்-201214:54:23 IST Report Abuse
Gokul Krishnan சோனியா வின் பனி பெண் என்றால் சும்மாவா... அடிச்ச காச அப்படியே கொஞ்சம் இத்தாலியில் பதுக்கிட்டு வாங்க
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201213:55:18 IST Report Abuse
Yaro Oruvan வெளக்குமாத்து கொண்டைக்கு பட்டு குஞ்சம்... பின் குறிப்பு:: இதுக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy - Bangalore,இந்தியா
30-ஏப்-201213:54:10 IST Report Abuse
Ramamoorthy ஊழலில் சற்றும் சளைத்தவர் அல்ல இந்த பிரதிபா பாட்டில். ஏற்கனவே இவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஒரு விவசாயியின் நிலத்தை அபகரிப்பு செய்து பிறகு நீதிமன்றம் தலையிட்டு, அந்த விவசாயிக்கே மீட்டுக் கொடுக்கப்பட்டது. இப்படி கேவலமாக பிழைப்பவர்கள்தான் இவர்கள். தற்பொழுது பிரதிபா அவர்களும் நில ஒதுக்கீட்டு பிரச்சினையில் சிக்கி உள்ளார். யார் நம்மை கேட்பது என்ற அசாத்திய தைரியம். சோனியா காந்தியின் தயவு இருக்கும் பொழுது என்ன கவலை? சட்டம் இவர்கள் கையில். சட்டம் ஒரு இருட்டறை என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மற்றும் ஒரு போபர்ஸ். கண் முன்னே நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. தற்பொழுது நமது இந்திய ராணுவத்தின் கேலிக்கூத்தான நிலமைமையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ராணுவத்தில் இது வரை உயிர் இழந்தவர்களுக்கு என்னதான் மதிப்பு மரியாதை. இந்த ஊழல் வாதிகள் இறுதியில் ராணுவத்தின் நிலைமையையும் நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். அந்நியன் பாணியில் தண்டனை கொடுக்கப் படவேண்டும் இவர்களுக்கு. மனது கொதிக்கத்தான் செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை