வெளிநாட்டில் சம்பாதித்த ரூ.12 லட்சம்: மனைவி மீது கணவர் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம்: வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயுடன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை, தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி கணவர், போலீசில் புகார் கொடுத்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரட்டை ஊரணியை சேர்ந்தவர் கதிரவன், 32. இவருக்கும், மண்டபம் அருகே நாரை ஊரணியை சேர்ந்த சிவசங்கமூர்த்தி மகள் விஜயலட்சுமிக்கும், 26, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, 20 நாட்களில் மனைவியை, தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கதிரவன் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் மனைவி பெயரில் வங்கியில் செலுத்தி வந்தார். கடந்த மார்ச்சில் சொந்த ஊர் திரும்பியபோது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். மறுத்த மனைவி, "வாழ பிடிக்கவில்லை' எனக்கூறி தன்னை துரத்தி விட்டதோடு, சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயையும் திருப்பி தரவில்லை. தன்னுடன் வாழ மனைவியை அறிவுறுத்த வேண்டும். அல்லது ரூ.12 லட்சத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதிரவன், காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தார். எஸ்.பி., கூறுகையில், ""உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mokkayan - Samoua,சமோ
08-மே-201210:17:10 IST Report Abuse
Mokkayan தம்பி , உன்னைப்போலவே, நெறையப்பேரு சம்பாதித்துகுடுத்துட்டு, சங்கதி தெரியாமலேயே பொண்டாட்டி,பிள்ளைங்களோட போனிலேயே பேசிக்கிட்டு வாழ்க்கை நடத்துராணுக . பெத்தவனகளை மதிக்காம, பிறந்தவர்களை மதிக்காம, இடையில் வந்த மனைவியை அளவுக்கு அதிகமாக மதிக்கும் நம் கலாசாரம், நம்மை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறது . மனைவியாய விவாக ரத்து செய்ய அனுமதிக்கும் நம் கலாசாரம், சட்டம் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ மறுதலிப்பதில்லை. சம்பாதிப்பதை அவரவர் கணக்கிலேயே வைத்து குடும்பம் நடத்த தெரியாதவனுக்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்