Advertisement
மாயாவதி வீட்டை புதுப்பிக்க 86 கோடி ரூபாய் அரசு பணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ :மாயாவதி உ.பி., முதல்வராக இருந்தபோது, தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், தற்போதைய உ.பி., மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மாயாவதி உ.பி., முதல்வராக இருந்த போது, 13, மால் அவென்யூவில் உள்ள பங்களாவில் குடியிருந்தார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கு, அரசு சார்பில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது' எனக் கேட்டிருந்தார்.உ.பி.,யில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வீடுகளை பராமரித்து வரும் எஸ்டேட் துறை, இதற்கு பதிலளித்துள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:மால் அவென்யூ பங்களாவை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த 2007ல், மாயாவதி முதல்வராக பதவியேற்றதும், புதுப்பிக்கும் பணி துவங்கியது. கடந்தாண்டு தான், இந்த புதுப்பிக்கும் பணி முடிவடைந்தது. இந்த பங்களாவை விரிவுப்படுத்துவதற்காக, அருகில் இருந்த அரசு அலுவலகம் இடிக்கப்பட்டது.


ஜன்னலுக்கு 15 லட்சம்:பிரதான பங்களா, ஆறு அறைகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலிருந்தும், மற்ற அறைக்கு செல்லக் கூடிய வகையில், இந்த அறைகள் அமைக்கப்பட்டன. இந்த பங்களாவின் இரண்டு ஜன்னல்களுக்கு, குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு ஜன்னலுக்கும் 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. விருந்தினர் இல்லமும் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விருந்தினர் இல்லத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித் துறை அமைச்சர் சிவ்பால் சிங் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201218:04:45 IST Report Abuse
Yaro Oruvan தன வீட்டை கேவலம் 86 கோடி ரூபாய்க்கு புதுப்பிக்க உரிமை இல்லையா?? அய்யகோ இந்த நாட்டில் சமூக நீதி செத்து விட்டது.. இன்னும் 43 பெரியார் வந்தால் தான் முடியும் ஷ் ஷப்பா இப்பவே கண்ணா கட்டுதே.. நமது தன் மான தமிழின தலைவர் டாக்டர் கலைஞ்சர் தலியிட்டு சமூக நீதி காக்க வேண்டும்.. குறைந்த பட்சம் 87 கோடிக்காவது வீட்டை பராமரிக்க சட்டத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Selvaraj - லண்டன்,யுனைடெட் கிங்டம்
10-மே-201216:33:57 IST Report Abuse
Selvaraj இவள் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியையாக இருந்த்தவள் மக்களின் பணத்தை கொள்ளையடித்து கோடிகளை சேர்த்தவள். இவளை வெளியில் நடமாட விட்டிருப்பதே தவறு. சி.பி.ஐ என்ன செய்கிறதோ தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10-மே-201216:31:04 IST Report Abuse
Angry ஜெய் அரசியல்ல சேர்த்துட்டா செம ஜாலியா இருக்கலாம் போல ?? விரிவுபடுத்த அரசு அலுவலகம் இடிப்பு ???? சூப்பர் லேடி இவ .......
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
10-மே-201215:00:04 IST Report Abuse
Ramasami Venkatesan இந்த செய்தி கேட்டு ஜனங்கள் அல்லவோ கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஜனங்கள் தான் இது போன்றவைகளை தடுக்க வேண்டும். மக்கள் சக்தி பலம் பொருந்தியது என்று நிரூபிக்க வேண்டும். இது மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பதற்கு சமம். எல்லோருக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
kovai manaa - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
10-மே-201212:03:00 IST Report Abuse
kovai manaa நமக்கு தெரிஞ்சதெல்லாம் நம்பள தெருக்கோடில கொண்டுபோய் உட்டுடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
thiyaga rajan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201211:30:37 IST Report Abuse
thiyaga rajan இதுக்கு தான் நக்சல் பாரிகளின் சேவை நாட்டுக்கு தேவை என்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு இவர்களை பாது காக்கும். நக்சல்கள் இவர்களை ஒழிதுக்கட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
K Thirumani - Erode,இந்தியா
10-மே-201210:56:05 IST Report Abuse
K Thirumani தலித் அரசியல் மற்றும் சாதி அரசியல் கொஞ்சம் கூட முன்னேற்றத்துக்கு வழி வகுப்பதில்லை. இட ஒதுக்கீடு தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது. தலித் வன்கொடுமை சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. 50 வருடம் முன் ஜாதி துவேஷம் இருந்திருக்கலாம். ஆனால் இன்று நடைமுறையில் ஜாதி துவேஷம் குறைந்து விட்டது. ஆனால் ஜாதி பேரை சொல்லி நடக்கும் ஓட்டு வங்கி அரசியல் அதிகமாகி விட்டது. ஜாதி பேரை சொல்லி கலவரம் நடத்துவது. ஜாதி பேரை சொல்லி குற்றங்களில் இருந்து தப்பிப்பது போன்ற செயல்கள் அதிகமாகி விட்டன...
Rate this:
Share this comment
AXN PRABHU - Chennai ,இந்தியா
10-மே-201223:33:48 IST Report Abuse
AXN PRABHUகரெக்ட் Mr திருமணி. நன்றாக சொன்னீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Kannan rajendran - cuddalore,இந்தியா
10-மே-201210:52:25 IST Report Abuse
Kannan rajendran பல்லு உள்ளவன் பட்டாணி தின்கிறான்....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-மே-201217:51:23 IST Report Abuse
Nallavan Nallavanஇப்படிப் பேசிப் பேசி கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் நமது நாட்டையே கரையான்கள் அரிப்பதுபோல அரித்து விட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
10-மே-201210:08:14 IST Report Abuse
JAY JAY " தன்னை வருத்துப்பவன் " அல்லது " தாழ்த்திக் கொள்பவன் "அல்லது " முதல் ஊழியன் " தான் தலைவன் என்ற பண்பு, இந்திய தலைவர்களிடம் சுதந்திரத்துக்கு அப்புறம் அறவே போய் விட்டது என்பதற்கு இதுவும் ஒரு சின்ன உதாரணம்....
Rate this:
Share this comment
Cancel
STALIN THEVAR - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201210:01:25 IST Report Abuse
STALIN THEVAR அம்மா மாயாவதி அவர்களே, இந்த 86 கோடி ரூபாய் மக்களுக்கு செலவு செய்து இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்