Advertisement
போக்குவரத்து துறையில் தொடர் அறிவிப்புகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மே
2012
01:27

சென்னை : போக்குவரத்து துறையில், 16 ஆயிரத்து 661 பணியிடங்களை நிரப்புதல், அனைத்து பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு, 300 கி.மீ.,க்கு மேல் செல்லும் பஸ்களை விரைவுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், டிரைவர்களுக்கு முழு உடல் பரிசோதனை என, தொடர் அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு:
அரசு பஸ்களை இயக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட டிரைவர்கள் உடல் தகுதியை அறிந்து, உடல் நலக் குறைவு ஏதேனும் இருப்பின், அதற்கான மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்டுக்கு ஒரு முறை, "முழு உடல் பரிசோதனை' செய்யப்படும்.


400 பணியிடங்கள்
அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும், 338 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டு, அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும். பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுகளுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு, 50 பணியிடங்கள் என்ற அடிப்படையில், 400 தொழில்நுட்ப காலி பணியிடங்கள், தொழில்நுட்ப பணி அல்லாத பழகுனர்களுக்கு, மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரப்பப்படும்.


நிலுவை ஓய்வூதியம்
கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்றும், ஓய்வூதியப் பயன்களை பெறாத தொழிலாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2011 மார்ச் வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான, 47 கோடியே 71 லட்ச ரூபாய், இந்த மாதத்திலேயே வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள, 4,688 தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான, 96 கோடியே 57 லட்ச ரூபாய் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.


16,661 பணியிடங்கள்
பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மார்ச் வரை ஓய்வு பெறவுள்ள பணியாளர்களின் பணியிடங்களையும் உள்ளடக்கி, 6,910 டிரைவர்கள், 7,402 கண்டக்டர்கள், 2,349 தொழில்நுட்ப பணியாளர்கள் என, மொத்தம் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதில், 4,511 பதிலி டிரைவர்கள், 4,558 பதிலி கண்டக்டர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்ப பணியாளர்கள் என, மொத்தம் 9,157 பதிலிப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.
மோட்டார் வகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள, 398 தொழில்நுட்ப பணியிடங்கள் மற்றும் 171 பிற பணியிடங்கள் என, மொத்தம் 569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.


மின்னணு பயணச்சீட்டு
பயணிகள் எளிதாக பயணச் சீட்டு பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் பயன்படுத்தி, மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை, அனைத்து பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.


300 கி.மீ.,க்கு மேல் விரைவு பஸ்
அரசு போக்குவரத்து கழகங்களால், 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தட இயக்கத்தை சீரமைக்கும் வகையில், தொலைதூர வழித்தட பஸ்கள் இனி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும்.
இதன் மூலம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் எண்ணிக்கை, 905ல் இருந்து 1,761 ஆக அதிகரிக்கும். இதையடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும். கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.


25 புதிய பணிமனைகள்
கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் அளவுக்கு பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழகம் முழுவதும், 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும். எனது அரசின் இந்த நடவடிக்கைகளால், போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேலும் செம்மையுறும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.