Advertisement
சர்க்கரை தொழிலாளருக்கு ரூ.1,500 சம்பள உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், குறைந்தபட்சம் ஒரு தொழிலாளருக்கு மாதம், 1,595 ரூபாய் சம்பளம் அதிகரிக்கும்; அதிகபட்சமாக 1,900 ரூபாய் கிடைக்கும்.
முதல்வர் ஜெயலலிதா, விதி 110ன் கீழ், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், இரண்டு பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, பொதுத் துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலை பணியாளர்கள் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (சிஸ்மா) ஒப்பந்தப்படி, ஊதியம் தரப்பட்டு வருகிறது. இதற்கு முன் இருந்த ஒப்பந்த காலம், 2008ம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்து விட்டது.
கடந்த 99ம் ஆண்டு, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி சென்னை ஐகோர்ட்டில் தொழிற்சங்கங்கள் மனு தாக்கல் செய்தன. இதன் மீது, 2009ம் ஆண்டில், "தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை ஊதிய உயர் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள ஏதுவாக, தேர்தல் நடத்த வேண்டும்' என ஐகோர்ட் உத்தரவிட்டது.


வழக்கு
இதையடுத்து, தினக்கூலி பணியாளர்களுக்கும், தேர்தலில் பங்கெடுக்கும் உரிமை உண்டு என, அரசு விளக்கம் அளித்தது. இதை எதிர்த்து, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள இரண்டு தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்ந்து, தொழிற்சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை பெற்றன. தடையை விலக்கக் கோரி, சர்க்கரை துறை ஆணையர் தாக்கல் செய்த மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இவ்வழக்குகளில் உள்ள இடைக்கால தடை விலக்கப்பட்ட பின் தான், சர்க்கரை ஆலைகளில் தொழிற்சங்கத் தேர்தல் நடத்தப்பட்டு, ஆலைப் பணியாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இயலும்.
முந்தைய அரசு, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு குந்தகமின்றி, தொழிலாளர்களுக்கு தற்காலிக ஊதியம் வழங்க, 2010ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 2008ம் ஆண்டு, "சிஸ்மா' ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வில் 90 சதவீதம், தற்காலிகமாக கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.


போராட்டம்
தற்போது, கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கடந்த மாதம் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடந்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை.


உடனே 10 சதவீத தொகை
இந்நிலையில், கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை நலிவுற்று இருப்பினும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 2008ம் ஆண்டு, "சிஸ்மா' ஒப்பந்தப்படி இறுதி செய்யப்பட்ட சம்பள விகிதத்தில் வழங்கப்படாமல், நிலுவையில் உள்ள 10 சதவீத தொகை உடனே வழங்கப்படும். இதன்படி, இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், "சிஸ்மா' ஒப்பந்தத்தில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் . ஊதிய விகிதத்தின் அடிப்படை ஊதியத்தில், 25 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக பெறுவர்.


புதிய ஒப்பந்தம்
கோர்ட் வழக்குகள் முடிந்த பின், முறையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த ஊதிய உயர்வை ஏற்று, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடன் பணிக்குத் திரும்புவர் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.


கூடுதல் ஊதியம் எவ்வளவு?


* இந்த சலுகைகள் மூலம் தொழிலாளர்களுக்கு மாதம், 1,595 முதல் 1,907 ரூபாய் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்
* 2008ம் ஆண்டு முதல் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படுவதால், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு, 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு
* 2012, ஏப்ரல் 1ம் தேதி முதல் 25 சதவீத சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதால், ஆண்டுக்கு 12 கோடியே 46 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Haribaskaran Krishnan - Chennai,இந்தியா
10-மே-201205:15:41 IST Report Abuse
Haribaskaran Krishnan நல்ல செய்தி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.