பா.ஜ., மாநாடு மதுரையில் இன்று ஆரம்பம் : பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : மதுரையில் பா.ஜ., ஐந்தாவது மாநில மாநாடு இன்று துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் இந்த மாநாட்டிற்காக, மதுரை ரிங் ரோடு மைதானத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்தில் சைக்கிள் குண்டு வெடிப்பு, கடந்த முறை அத்வானி வந்த போது பைப் குண்டு வெடிப்பு என சம்பவங்கள் நடந்ததால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.


அத்வானி
ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாடு பந்தலில், பா.ஜ., மாநாடு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது. தேசியத் தலைவர் நிதின் கட்காரி, காலையில் கொடி ஏற்றி வைக்கிறார். மாலை நிகழ்ச்சியில், மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் அத்வானி, மதுரை வருகிறார். அவருடன், முன்னாள் தேசியத் தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி வருகின்றனர்.
மூன்று மாநில முதல்வர்கள், ஐந்து மாநில தலைவர்கள், மத்திய, மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மதுரை விமான நிலையம் முதல், மாநாடு திடல் மற்றும் தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள் வரை வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 27 வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபடுகின்றனர். நேற்று மாலை, பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற பின், அத்வானி இன்றிரவே டில்லி செல்கிறார்.


பந்தல்
மாநாட்டிற்காக பார்லிமென்ட், ராஜாஜி ஹால் மற்றும் புனித ஜார்ஜ் கோட்டை முகப்புடன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ம் தேதி முதல் தினமும் 300 ஊழியர்கள் இரவு, பகலாக மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர். 67 ஏக்கர் பரப்பில் ஜனா கிருஷ்ணமூர்த்தி திடலில், 80 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட சுகுமாரன் நம்பியார் அரங்கில் மாநாடு நடக்கிறது.
மேடை, 160 அடி நீளம் மற்றும் 50 அடி அகலத்தில் இரு புறமும் தமிழ்த்தாய் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் நான்கு கவுன்டர்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று வேளையும் 25 ஆயிரம் பேர் உணவருந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீரை சுத்திகரித்து வழங்க கருவிகள், 600 தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 4.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது. பந்தலில் ஒரு லட்சம் பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.


கண்காட்சி
மாநாட்டின் மற்றொரு புறம், தாமரை களஞ்சியம் பெயரில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஜனசங்க நினைவு பெட்டகம், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்த படங்கள் இடம் பெற்றுள்ளன. "நெஞ்சு பொறுக்குதில்லையே' மற்றும் "ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத குடும்ப அரசியல்' தலைப்புகளில், தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் குறித்த கேலிச் சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. பா.ஜ., ஆளும் ஒன்பது மாநிலங்களில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தனித்தனி அரங்குகள் உள்ளன. தமிழகத்தில் பா.ஜ., செயல்பாடுகள் குறித்த விளக்கப் படங்களும் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் நாளான நாளை, பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.


மருத்துவ குழு தயார்
ஒரு லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய, மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவசர சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் பங்கேற்கும் ரத்த தான முகாம் நடக்கிறது. மாநாடு முகப்பில், தமிழ்த்தாய் சிலையுடன் அலங்கார நீரூற்று, 60 அடி நீள கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேடை உட்பட ஐந்து இடங்களில் மெகா எல்.சி.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு பணிகள் அனைத்தும் நேற்று காலை நிறைவு பெற்றன.
இப்பணிகளை, தேசிய செயலர் முரளிதர ராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் ஆய்வு செய்தனர். அமைப்பு செயலர் மோகன்ராஜுலு, பொதுச் செயலர் சரவணபெருமாள், மாநில செயலர் சுரேந்திரன், மருத்துவர் அணி தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை விளக்கினர்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்