INDIA NEWS | நெய்வேலி தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு? | Dinamalar
Advertisement
நெய்வேலி தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தும்படி நெய்வேலி நிறுவனத் தலைவருக்கு, மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உத்தரவிட்டுள்ளார். அது முடியாத பட்சத்தில், தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளை டில்லிக்கு அழைத்து வந்தால், தானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் எனக் கூறியுள்ளார்.ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், கடலூர் லோக்சபா எம்.பி.,யான கே.எஸ்.அழகிரி நேற்று டில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நெய்வேலியில் நடைபெற்று வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.இதையடுத்து, அங்கிருந்தே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவரான அன்சாரியை தொலைபேசி மூலம் அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும். வேலை நிறுத்தம் தொடர்ந்து கொண்டே இருப்பது சரியாக இருக்க இயலாது. எனவே, தொழிலாளர் பிரதிநிதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துப் பேச வேண்டும். உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவிர, ஒரு வேளை நெய்வேலியில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படுவதில் சிக்கலோ அல்லது தயக்கமோ நிர்வாகத்திற்கு இருக்குமேயானால், உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளை டில்லிக்கு அழைத்து வருவது நலமாக இருக்கும். அவர்களுடன் நானே கூட நேரடியாக பேசிப் பார்த்து, தீர்வு காண முயற்சி செய்கிறேன் என்று அன்சாரியிடம் பேசினார்.இதனால், நெய்வேலி நிறுவன நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை தொடர்பாக நிலவி வந்த முட்டுக்கட்டை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது டில்லி நிருபர்-

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்